மு.க.ஸ்டாலின்

“அமெரிக்கா வரை சந்தி சிரிக்கும் அ.தி.மு.க அரசின் லஞ்ச லாவண்யம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!

சிடிஎஸ் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

“அமெரிக்கா வரை சந்தி சிரிக்கும் அ.தி.மு.க அரசின் லஞ்ச லாவண்யம்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அமெரிக்காவை சேர்ந்த மென்பொருள் நிறுவனமான சிடிஎஸ் நிறுவனத்திடம் அ.தி.மு.க அரசு கட்டிட அனுமதி, மின் இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் அனுமதிபெற 26 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கடந்த பிப்ரவரி மாதம் செய்தி வெளியானது. இந்நிலையில், லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு சி.டி.எஸ் நிறுவனம் அபராதம் செலுத்தியிருக்கிறது.

இதனையடுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சிடிஎஸ் லஞ்சம் கொடுத்தது தொடர்பாகவும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு கண்டனம் தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:

“அமெரிக்காவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான #CTS சென்னையில் புதிய கட்டடம் கட்ட அனுமதிக்காக, அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு லஞ்சம் தந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு அபராதம் செலுத்தி இருக்கிறது. தமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரித்திருக்கிறது.

லஞ்சம் தந்தவர்களுக்கு அமெரிக்கா தண்டனை தந்திருக்கிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மீது FIR கூட போடாமல் பாதுகாக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை!

மத்திய அரசும், சிபிஐயும் கண்டும் காணாமல் இதை ஊக்குவிக்கின்றனவா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories