மு.க.ஸ்டாலின்

“உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்” உருகிய மு.க.ஸ்டாலின்; உணர்ச்சி வசப்பட்ட வைகோ!

மதிமுக சார்பில் நடத்தப்பட்ட அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரை ஆற்றினார்.

“உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்” உருகிய மு.க.ஸ்டாலின்; உணர்ச்சி வசப்பட்ட வைகோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பேரறிஞர் பெருந்தகை, அறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் திரு உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதன் பின்னர், ம.தி.மு.க சார்பில் சென்னை நந்தனத்தின் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை தொடக்கி வைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை ஆற்றினார்.

“உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்” உருகிய மு.க.ஸ்டாலின்; உணர்ச்சி வசப்பட்ட வைகோ!

அப்போது பேசிய அவர், “பேரறிஞர் அண்ணாதான் நம்முடைய முகம், நம்முடைய முகவரியாக திகழ்ந்து வருகிறார். தி.மு.கவின் முகமாக என்றும் அறிஞர் அண்ணா இருப்பார். தி.மு.கவுக்கு உற்ற துணையாக இருந்து வருகிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

நான் ம.தி.மு.க-வின் மாநாட்டை தொடங்கி வைத்து பங்கேற்றது இதுவே முதல் முறை. இந்த வாய்ப்பு கிடைத்தது மிக மகிழ்ச்சியை அளிக்கிறது. தலைவர் கலைஞரிடம் அண்ணன் வைகோ கொடுத்த வாக்குறுதிபடி, எங்களுக்கு பக்கபலமாக ம.தி.மு.க இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றது ம.தி.மு.க. அப்போது தனக்கு சின்னம் முக்கியம் இல்லை. எண்ணம்தான் முக்கியம் என்பதை அடிப்படையாக கொண்டு சொன்னார் அண்ணன் வைகோ. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வரலாறு காணாத மாபெரும் வெற்றியை தி.மு.கழக கூட்டணி பெற்றுள்ளது.

“உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்” உருகிய மு.க.ஸ்டாலின்; உணர்ச்சி வசப்பட்ட வைகோ!

இந்தியா முழுமையும் ஒரு மாதிரியாக நின்றாலும், தமிழகம் மட்டும் தனி மாதிரியாக இருக்கும் என்பதை நடந்து முடிந்த தேர்தல் வெற்றி மூலம் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகம் நிரூபித்துள்ளது. இந்தியாவின் எதிர்க்கட்சிக் குரலாக தி.மு.க. உருவெடுத்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேர்த்து தி.மு.க. குரல் எழுப்பி வருகிறது” என மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாட்டில் சர்வாதிகாரம் தலை தூக்கி வருகிறது. போராட்டக்களம் தயாராகிக் கொண்டிருக்கிறது. களம் காண தயாராக வேண்டிய தருணம் இது. தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தொடர்ந்து பல்வேறு வகையில் போராட்டங்கள் நடந்தேறி வருகிறது. இருப்பினும் தமிழகம் மட்டும் திட்டமிட்டு பழிவாங்கப்பட்டு வருகிறது.

“உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள்” உருகிய மு.க.ஸ்டாலின்; உணர்ச்சி வசப்பட்ட வைகோ!

தமிழகத்தில் ஒரு புறம் கலாசார தாக்குதலையும், மறு புறம் ரசாயண தாக்குதலையும் நடத்தி வருகின்றனர். தபால் துறை, ரயில்வேத் துறை ஆகிய அரசுத் தேர்வுகளில் திட்டமிட்டு தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் கண் அசைந்தால் போதும், எளிதாக இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆகவே அவர்கள் இந்தியை திணித்துக்கொண்டே இருக்கட்டும், நாம் அதனை எதிர்த்துக் கொண்டே இருப்போம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, நீர் அடித்து நீர் விலகாது என்பது போன்று தி.மு.க, ம.தி.மு.க உறவு உள்ளது என்றும், தமிழர், திராவிடம், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய சொற்கள் பிரிந்துக்கிடக்கும் தமிழர்களை ஒன்றிணைக்கும் என்றும் கூறியுள்ளார். தி.மு.கழகத்துக்கு எப்படி நான் நிரந்தர தளபதியாக இருக்கின்றேனோ, அதேபோல் நிரந்தர போர்வாளாக வைகோ திகழ்கிறார் என்றார்.

இறுதியாக தனது பேச்சை முடிக்கும் போது, வைகோவுக்கு அன்புக் கட்டளை ஒன்றை விடுத்தார் மு.க.ஸ்டாலின். “ உங்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள். இதை நான் அன்போடு சொல்லவில்லை. உரிமையோடு சொல்கிறேன். தமிழர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார். தி.மு.க தலைவர் ஸ்டாலினின் இந்த உருக்கமான பேச்சைக் வைகோ உணர்ச்சி வயப்பட, நெகிழ்ச்சிகரமாக அந்தத் தருணம் அமைந்தது.

banner

Related Stories

Related Stories