மு.க.ஸ்டாலின்

“நான் வெளிநாடு சென்று நிதி திரட்டி வந்தேன்; நீங்கள் என்ன செய்தீர்கள்?” - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி!

“சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல, எடப்பாடி ஏதாவது உற்பத்தியைக் கொண்டு வந்தால் தானே தைரியமாக பாராட்டு விழா நடத்துமாறு கூறமுடியும்” என குற்றம்சாட்டியுள்ளார் ஸ்டாலின்.

“நான் வெளிநாடு சென்று நிதி திரட்டி வந்தேன்; நீங்கள் என்ன செய்தீர்கள்?” - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை கிழக்கு மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் தில்லை கதிரவனின் மகன் முத்துவேல் மற்றும் ஆஷிகா ஆகியோரின் திருமணம் அண்ணாநகரில் உள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் நடைபெற்றது. இந்த சுயமரியாதை திருமணத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார்.

திருமண நிகழ்வில் மணமக்களை வாழ்த்திப் பேசிய மு.க.ஸ்டாலின், “இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் தற்போது பரவலாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோருக்கு நாம் செய்யும் மரியாதையும் பெருமையும் ஆகும்.

தி.மு.க-வினர் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அழகான தமிழில் பெயர் வைக்கவேண்டும். ஏனென்றால் தற்போது தமிழுக்கு மிகப்பெரும் சோதனை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “முதலமைச்சர் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ளார். நான் மீண்டும் சொல்கிறேன். எவ்வளவு முதலீட்டைப் பெற்றுள்ளீர்கள்? எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுள்ளீர்கள்? அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு தெளிவுபடுத்தினால் தி.மு.க சார்பில் பாராட்டு விழா நடத்த தயாராக இருக்கிறோம்.

ஆனால், நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க-வினர் பாராட்டு விழா நடத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல ஏதாவது உற்பத்தியைக் கொண்டு வந்தால் தானே தைரியமாக பாராட்டு விழா நடத்துமாறு கூறமுடியும்” என்றும் குற்றம் சாட்டினார்.

“நான் வெளிநாடு சென்று நிதி திரட்டி வந்தேன்; நீங்கள் என்ன செய்தீர்கள்?” - முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி!

தொடர்ந்து, “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பல லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதன் நிலை என்ன என்று கேள்வி எழுப்பினால் தி.மு.க-வினரை இப்போதைய அமைச்சர்கள் அவதூறாகப் பேசுகிறார்கள்.

தி.மு.க ஆட்சிக் காலத்தில் நான் துணை முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சென்னைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வந்தேன். மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க ராமநாதபுரம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதிகளைப் பெற்று வந்து செயல்படுத்தினோம்” என்று பட்டியலிட்டார்.

மேலும் பேசிய மு.க.ஸ்டாலின், “தி.மு.க ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு அம்பத்தூர் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை இருக்கும் தொழிற்சாலைகளே தி.மு.க ஆட்சியின் சாதனை. கலைஞர் ஆட்சியில் இத்தனை திட்டங்கள் வருவதற்கு காரணம் உங்கள் ஆட்சியைப் போல கலெக்ஷன் - கரப்க்ஷன் - கமிஷன் இல்லாத ஆட்சியாக இருந்ததே காரணம்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories