மு.க.ஸ்டாலின்

கல்விக் கொள்கையை ஆராய தி.மு.க சார்பில் குழு அமைப்பு : பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட 10 பேர் அறிவிப்பு

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேசிய கல்விக்கொள்கையின் புதிய வரைவு குறித்து ஆராய்ந்திட ஆய்வுக்குழு அமைத்துள்ளார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்.

கல்விக் கொள்கையை ஆராய தி.மு.க சார்பில் குழு அமைப்பு :  பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட 10 பேர் அறிவிப்பு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தி மொழியை திணிக்கும் வகையில் மத்திய பா.ஜ.க அரசு, தேசிய கல்விக் கொள்கை எனும் பெயரில் புதிய பாடத் திட்டத்தை உருவாக்க வரைவு அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டது. இது மாநில மொழிகளுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறது என்று நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் எழுந்ததால் இந்தி பாடம் குறித்த அறிவிப்பில் திருத்தம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து தி.மு.க. சார்பில் ஆராய்ந்து ஆய்வறிக்கை வெளியிட உத்தரவிட்டு ஆய்வுக்குழுவை நியமித்துள்ளார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

இது தொடர்பாக அறிக்கையில், “ தமிழ் மொழியாம் செம்மொழிக்கு அச்சுறுத்தலாக உள்ள மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை குறித்து வல்லுநர்களின் கருத்தினை அறிவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆய்வுக் குழு அமைக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆய்வுக் குழுவில், முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முனைவர்கள் ராமசாமி, ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, தி.மு.க. எம்.எல்.ஏ., எழிலரசன், சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத் தலைவர் ரவீந்திரநாத், பேராசிரியர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, எம்.பி, செந்தில் குமார் ஆகிய பத்து பேர் இடம்பெற்றுள்ளனர் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவை ஆராய்ந்து பத்து நாட்களுக்கும் தலைமை கழகத்திடம் அளிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டு, திமுக ஆய்வுக் குழுவின் அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தி.மு.க தலைவரின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், ஆளும் அ.தி.மு.க இதுகுறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories