மு.க.ஸ்டாலின்

தண்ணீர் பிரச்னை : சட்டப்பேரவையில் கேள்விகளால் துளைத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை குறித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

தண்ணீர் பிரச்னை : சட்டப்பேரவையில் கேள்விகளால் துளைத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

குடிநீர் பிரச்னையை பற்றிய சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தண்ணீர் பிரச்னை குறித்த கிரண்பேடியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். அவரது பேச்சு அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதால் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் குடிநீர் பிரச்னை குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்தார். அதன்பின் பேசிய அவர், குடிநீர் பிரச்னையை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

மேலும் பேசிய மு.க.ஸ்டாலின், “சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளும் வறண்டுவிட்டன. 2020-ல் தான் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று நிதி ஆயோக் கூறியிருந்தது, ஆனால் 2019-ம் ஆண்டிலே பஞ்சம் வந்துவிட்டது. நிதி ஆயோக் அறிக்கையை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை.

தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் தோல்வியடைந்துவிட்டன. சென்னையில் லாரிகள் மூலம் குடிநீா் விநியோகிக்கப்படுவதாக தமிழக அரசு குறிப்பிடுகிறது. ஆனால், அதுகுறித்த புள்ளி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை.

பல்வேறு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். குடிநீர் பிரச்னை குறித்து அனைத்து உறுப்பினர்களின் கருத்துகளையும் கேட்கவேண்டும். சடப்பேரவையில் ஒருநாள் முழுவதும் சிறப்பு நிகழ்வாக விவாதம் நடத்தப்பட வேண்டும்.” என வலியுறுத்தினார்.

தண்ணீர் பிரச்னை : சட்டப்பேரவையில் கேள்விகளால் துளைத்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

பின்னர் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னை குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி ட்விட்டரில் கூறிய கருத்துகள் குறித்துப் பேசினார். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சை சபாநாயகர் அவைக்குறிப்பிலிருந்து நீக்கியதைக் கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், “புதுச்சேரி முதல்வர் கிரண் பேடி, தான் ஒரு ஆளுநர் என்பதை மறந்து வரம்பு மீறி, தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளை விமர்சித்து இருந்தால் கூட பரவாயில்லை, தமிழக மக்களை கோழைத்தனமானவர்கள், சுயநலமானவர்கள் எனப் பேசியிருப்பதற்கு அவர் விளக்கம் அளிக்கவேண்டும் என சட்டப்பேரவையில் பேசினேன். எனது பேச்சுக்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்து எனது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். எனவே வெளிநடப்பு செய்தோம்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories