மு.க.ஸ்டாலின்

4 தொகுதி இடைத்தேர்தல்: நாளை முதல் 2ம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் கழகத் தலைவர்!

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் நாளை முதல் இரண்டாம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

4 தொகுதி இடைத்தேர்தல்: நாளை முதல் 2ம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் கழகத் தலைவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற மே 19ம் தேதி நடைபெறுகிறது.

முன்னதாக, ஏப்.,18 அன்று தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கும், சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான 18 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இந்நிலையில், 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள தி.மு.க.வேட்பாளர்களை ஆதரித்து மே 1ம் தேதி தனது முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.

இதனையடுத்து, நாளை முதல் மே 17ம் தேதி வரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கழக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார் என திராவிட முன்னேற்ற கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசார விவரங்கள் பின்வருமாறு:

4 தொகுதி இடைத்தேர்தல்: நாளை முதல் 2ம் கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார் கழகத் தலைவர்!
banner

Related Stories

Related Stories