மு.க.ஸ்டாலின்

‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்துவுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

Gomathi Marimuthu
Gomathi Marimuthu
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, ஏற்கெனவே அறிவித்தபடி 10 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

அண்ணா அறிவாலயத்துக்கு வரவழைத்து, ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றமைக்காக நேரில் பாராட்டிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்த ‘தங்க மங்கை’ கோமதி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்திருக்கும் நிதி உதவி, விளையாட்டில் தான் சாதிக்க இன்னும் ஊக்கமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகி வரும் எனக்கு, வெளிநாடுகளில் பயிற்சியளிக்க வேண்டும். இந்தியாவில் தனக்கு இணையான போட்டியாளர்கள் தற்போது இல்லாததால் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறும் அளவுக்கான பயிற்சி பெற வெளிநாட்டுப் போட்டியாளர்களோடு பயிற்சியளிக்க வேண்டும்.

கிராமங்களில் இருக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்குப் பயன்படும் வகையில் விளையாட்டு மைதானங்கள் அமைத்துத்தர வேண்டும். வீரர், வீராங்கனைகளுக்கு அரசு பொருளாதார ரீதியாக உதவி செய்தால் இன்னும் பல சாதனையாளர்கள் உருவாகுவார்கள்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories