மு.க.ஸ்டாலின்

“அ.தி.மு.க கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல; கொள்ளைக் கூட்டணி”- மு.க.ஸ்டாலின் விளாசல்!

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

திருச்சி உழவர் சந்தை பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்.
திருச்சி உழவர் சந்தை பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர்.
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி உழவர் சந்தையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“ஆளுங்கட்சிகளாக உள்ள பா.ஜ.க., அ.தி.மு.க. மற்றும் வியாபரத்திற்காக கூட்டணி வைத்துள்ள பா.ம.க-வின் தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் முரண்பாடுகளின் மொத்த உருவங்களாக உள்ளன. அ.தி.மு.க கூட்டணியின் தேர்தல் அறிக்கைகளில் நீட் ரத்து, எழுவர் விடுதலை போன்ற சமூகம் சார்ந்த எந்த ஒரு தகவலும் இடம்பெறவில்லை. ஆகையால்தான் சொல்கிறேன், அ.தி.மு.க-வின் கூட்டணி கொள்கை அடிப்படையிலான கூட்டணி அல்ல; அது ஒரு கொள்ளைக் கூட்டணி.”

மேலும் பேசிய அவர், திராவிட முன்னேற்றக் கழகம் அரசியலில் காலூன்றுவதற்கு அடித்தளமாக இருந்தது இந்த திருச்சி தான், தி.மு.க-வின் எஃகு கோட்டையாக இருப்பது இந்த திருச்சிதான் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories