
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியா வந்துள்ளது.
இந்நிலையில் மந்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி வந்துள்ளது. அப்போது இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கஃபேவுக்கு செல்வதற்காக, தாங்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.
அப்போது இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலிய வீராங்கனைகளை பாலியல் ரீதியா துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகார் எழுந்ததை அடுத்து, வீரர்களிடம் தவறாக நடந்து கொண்டு இளைஞர் ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க அமைச்சர் அலட்சியத்துடன் பதில் அளித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
”ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் யாரிடமும் சொல்லாமல் ஏன் வெளியே சென்றார்கள். ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.” அம்மாநில அமைச்சர் அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் அருண் யாதவ், "இந்த சம்பவம் ஏற்கனவே மத்தியப் பிரதேசம் மற்றும் நாட்டின் நற்பெயரை சர்வதேச அளவில் கெடுத்துவிட்டது; இது ஒரு ஆழமான கறையை ஏற்படுத்தியுள்ளது.
மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையையும் பலவீனமான நிர்வாக அமைப்பையும் சரிசெய்வதற்குப் பதிலாக, கைலாஷ் விஜய்வர்கியாவின் கருத்துக்கள் அவரது மனநிலையையும் அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலையையும் பிரதிபலிக்கின்றன” என தெரிவித்துள்ளார்.






