இந்தியா

112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு : ஒன்றிய அரசின் அதிர்ச்சி தகவல்!

செப்டம்பர் மாதத்தில் 112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.

112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு : ஒன்றிய அரசின் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் சளித் தொற்று, கிருமித் தொற்று, காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 112 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக ஒன்றிய அரசின் மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து அதன் விவரங்களை ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த விவரங்களை அந்தத் தளத்தில் அறிந்து கொண்டு விழிப்புணா்வுடன் செயல்படலாம் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தரமற்ற மருந்துகளை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories