இந்தியா

காய்ச்சல், சளித் தொற்றுக்கு பயன்படுத்தும் 97 மருந்துகள் தரமற்றவை : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

97 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

காய்ச்சல், சளித் தொற்றுக்கு பயன்படுத்தும் 97 மருந்துகள் தரமற்றவை : ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் ஒன்றிய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன.

அதேபோன்று, போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த மாதத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அவற்றில் காய்ச்சல், சளித் தொற்று, கிருமித் தொற்று உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 94 மருந்துகள் தரமற்றவையாகவும், 3 மருந்துகள் போலியானதாகவும் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அதன் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories