நாடாளுமன்றத்தில், காங்கிரஸ் உறுப்பினர் விஷ்ணு பிரசாத் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்து மூலம் பதிலளித்துள்ளார்.
அதில், ஒன்றிய அரசின் கடன் 200 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015- 16ம் நிதியாண்டில் ஒன்றிய அரசு வாங்கும் சராசரி கடன் அளவு 5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 3 மடங்கு அதிகரித்து 15 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டில் 185.94 லட்சம் கோடியாக இருந்த கடன், நடப்பு நிதியாண்டில் 200.16 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், திருப்பி செலுத்தும் கடன் சொர்ப்ப அளவிலேயே உள்ளது.
கடந்த 2015-16ம் நிதியாண்டில் 1.67 லட்சம் கோடி ரூபாய் திருப்பி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது, 4.61 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது.
வளர்ச்சித்திட்டங்களுக்காக எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் அதிக அளவு கடன் வாங்குவதாக, ஒன்றிய அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், ஒன்றிய அரசின் கடன் வாங்கும் திறன் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது ஒன்றிய அமைச்சரின் அறிக்கையிலேயே தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.