இந்தியா

Ticket கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரயில்வே- பயன்படுத்துவது எப்படி?

Ticket கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரயில்வே- பயன்படுத்துவது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பண்டிகை காலத்தையொட்டி,சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பி வருவதற்கான ரயில் டிக்கெட் கட்டண விலையில், 20 சதவீத தள்ளுபடியை ரயில்வே அமைச்சகம் அறிவித்து உள்ளது. ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரெயில்களைத் தவிர்த்து மற்ற பயணிகள் ரயிலில் இதனை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 13 முதல் 26-ந்தேதி வரை ஒரு வழி பயணம் மேற்கொள்பவர்கள், நவம்பர் 17 முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை அதே ரெயில்களில் திரும்புவதற்கான டிக்கெட்டையும் முன்பதிவு செய்தால், அந்த திரும்பும் பயணத்துக்கான கட்டணத்தில் 20 சதவீத சலுகை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ticket கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரயில்வே- பயன்படுத்துவது எப்படி?

அதேநேரம் அக்டோபர் 13 முதல் 26-ந்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் திரும்பி வரும் பயணத்துக்கான டிக்கெட்டுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான முன்பதிவு, வருகிற 14-ந்தேதி தொடங்குகிறது. இந்த தள்ளுபடி திட்டத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு கட்டணம் திரும்ப தரப்படமாட்டாது என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories