மேற்கு வங்கத்தில் 100 நாள் வேலை திட்டத்தை 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் காரணங்களுக்காக கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு முடக்கி வைத்திருப்பதாக திருணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் தெரிவித்து வருகின்றன.
இதனிடையே தொழிலாளர் நல அமைப்பு ஒன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமர்வு, 100 நாள் வேலைத்திட்டத்தை ஆகஸ்ட் 1 முதல் மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒன்றிய அரசின் திட்டங்களை கால வரம்பின்றி முடக்கி வைக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. திட்டத்தை செயல்படுத்துவதில் பிரச்சனைகள் இருந்தால் கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ளலாம் ஒன்றிய அரசே தொழிலாளர்களுக்கான கூலியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம்.
ஆனால் திட்டத்தை முடக்கி வைக்க முடியாது என்று உத்தரவில் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, நிலுவையில் உள்ள 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். இது மக்கள் பணம். யாருடைய சொந்த பணமும் அல்ல என்று தெரிவித்துள்ளார்.