இந்தியா

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு ஆபத்து - அன்றே எச்சரித்த மன்மோகன் சிங் !

மக்கள்தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற போதிலும், குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்கள், அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைவான வளங்களைப் பெறும்.

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு ஆபத்து - அன்றே எச்சரித்த மன்மோகன் சிங் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த தொகுதி மறுவரையறை கடந்த 1952, 1963 மற்றும் 1973 ஆகிய ஆண்டுகளில் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன.

பின்னர் 1976ஆம் ஆண்டில் 42வது சட்டத் திருத்தத்தின் மூலம் இந்தியாவின் தொகுதி மறுவரையறையை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

மேலும் இந்த திட்டத்தின் படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மாநிலங்களை தொகுதி மறுவரையறை மூலம் தண்டிக்கக் கூடாது என முடிவு எடுக்கப்பட்டது. பின்னர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் தொகுதி மறுவரையறை 2026 ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் 2001 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொண்டால் தங்களது பிரதிநிதித்துவம் குறைந்து விடும். இது நியாயமற்றது என தென் மாநிலங்கள் கடுமையாக எதிர்த்தது. தென் மாநிலங்களின் நியாயமான வலுவான குரலுக்கு அன்றைய ஒன்றிய அரசு பணிந்ததால் அவற்றை முடக்கியது.

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு ஆபத்து - அன்றே எச்சரித்த மன்மோகன் சிங் !

இந்நிலையில் வாஜ்பாய் நீட்டித்த முடக்கம் 2026 ஆம் ஆண்டோடு முடிவடைய இருப்பதால் தொகுதி மறுவரையறையை செய்ய ஒன்றிய பாஜக அரசு முன்வந்துள்ளது. இது அரசியலமைப்பின் படி நடக்க வேண்டிய ஒன்றாக இருந்தாலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் யார் என்பதை கொண்டே இதனை முடிவு செய்ய வேண்டியுள்ளது.

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு உண்டாகும் ஆபத்து குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 2000ஆம் ஆண்டில் வெளியிட்ட கருத்து பின்வருமாறு :-

1. மக்கள்தொகை கட்டுப்பாட்டின் வெற்றியால் பிரதிநிதித்துவ இழப்பு

குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்துவதிலும், குறைந்த மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்களை அடைவதிலும் தென் மாநிலங்கள் வரலாற்று ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. இருப்பினும், தொகுதி மறுவரையை மக்கள்தொகை அளவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டால், இந்த வெற்றி நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வழிவகுக்கும்.

2. சிறப்பாக செயலாற்றிய தென் மாநிலங்களுக்கு தண்டனை!

மக்கள் தொகை தொடர்பான கொள்கைகள் மூலம் மக்கள்தொகை வளர்ச்சியை திறம்பட நிர்வகித்த மாநிலங்கள் நாடாளுமன்ற இடங்களின் பங்கில் குறைப்பை எதிர்கொள்ள நேரிடும்,

அதேவேளையில் அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட வட மாநிலங்கள் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெறக்கூடும். இது மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு கொள்கையை கடைபிடித்த மாநிலங்களுக்கு தண்டனையாக அமையும்!

தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களுக்கு ஆபத்து - அன்றே எச்சரித்த மன்மோகன் சிங் !

3. நல்லாட்சியை ஊக்கப்படுத்தாமல் இருத்தல்

வெற்றிகரமான மக்கள் தொகைக் கொள்கையில் வெற்றி அடைந்துள்ள மாநிலங்களுக்கு அரசியல் அதிகாரம் மற்றும் பிரதிநிதித்துவம் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டாகும்.

அதுமட்டுமின்றி, நிலையான வளர்ச்சி மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கு பங்களிக்கும் கொள்கைகளை செயல்படுத்துவதில் இருந்து மாநிலங்களிடம் தொய்வின்மையை ஊக்குவிக்குவிக்கும்.

4. நிதி மற்றும் வள ஒதுக்கீட்டிற்கான தாக்கங்கள்

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொண்டால் ஒன்றிய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மேலும் சுருக்கப்பட்டும்.

அதாவது, மக்கள்தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற போதிலும், குறைந்த மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்கள், அதிக மக்கள்தொகை வளர்ச்சியைக் கொண்ட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைவான வளங்களைப் பெறும் சூழ்நிலைக்கு இது வழிவகுக்கும்.

5. மாற்று அணுகுமுறைகள்

சமூக-பொருளாதார மேம்பாடு, எழுத்தறிவு விகிதங்கள் மற்றும் முன்னேற்றத்தின் பிற குறிகாட்டிகள் போன்ற மக்கள்தொகைக்கு அப்பாற்பட்ட காரணிகளை எல்லை நிர்ணயம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இது மிகவும் சமநிலையான பிரதிநிதித்துவத்தை வழங்கக்கூடும் மற்றும் மாநிலங்கள் அவற்றின் வெற்றிகரமான மக்கள்தொகை கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு தண்டிக்கப்படுவதைத் தடுக்கலாம்.”

எனத் தெரிவித்துள்ளார்.

அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் நலனுக்கு பல்வேறு நடவடிக்கையை எடுத்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories

live tv