இந்தியா

”நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்புச் சட்டமே உயர்ந்தது” : ஜகதீப் தன்கருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதில்!

நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்புச் சட்டமே உயர்ந்தது என, குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கருக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பதிலளித்துள்ளார்.

”நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்புச் சட்டமே உயர்ந்தது” : ஜகதீப் தன்கருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்யும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குடியரசு குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தொடர்ந்து பேசி வருகிறார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல் செயல்படுகிறது. நாம் எங்கு செல்கிறோம்? நாட்டில் என்ன நடக்கிறது? குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா?. குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழி நடத்தும் சூழ்நிலையை அனுமதிக்க முடியாது என கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, குடியரசு தலைவரின் கருத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ”நாடாளுமன்றம் மிக உயர்ந்தது என்று சொல்வது நல்ல கூற்று கிடையாது. அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது.

நீதித்துறை, நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் அரசியலமைப்பின் நான்கு மூலைகளுக்குள் செயல்படவேண்டும். நாடாளுமன்றம் செயல்படாதபோது, நிர்வாகம் தனது கடமைகளை செய்யாதபோது மட்டுமே நீதித்துறை தலையிடும்.

மேலும் நீதித்துறையின் அதிகப்படியான தலையீடு குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் கொள்கை முடிவுகள் தொடர்பான பொதுநல வழக்குகளை கையாள உச்சநீதிமன்றம் தயங்குவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories