கேரளாவில் மூணார் உள்பட்ட பகுதிகல் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் இடம்பெற்றுள்ளது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இந்த தொகுதியில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சி.பி.எம் கட்சி சார்பில் ராஜா என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால், கிறிஸ்துவ மதத்தை அவர் பின்பற்றுவதால் இட ஒதுக்கீடு தொகுதியில் போட்டியிட்டது செல்லாது என்று அறிவிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் தேர்தல் வெற்றியை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதனை எதிர்த்து ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு 2023 ஆம் ஆண்டு இடைக்கால தடை விதித்தது. எனினும் இந்த வழக்கில் தொடர் விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் வல்ஹனியா தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது. அதோடு அவருக்கு உரிய ஊதியம் உள்ளிட்ட அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.