இந்தியா

”மக்கள் மத்தியில் சிதைந்து வரும் மோடி பிம்பம்” : C-Voter நடத்திய ஆய்வில் தகவல்!

மக்கள் மத்தியில் பிரதமர் மோடியின் பிம்பம் சிதைத்து வருகிறது என C-Voter நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

”மக்கள் மத்தியில் சிதைந்து வரும் மோடி பிம்பம்” : C-Voter நடத்திய ஆய்வில் தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றியத்தில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கடுமையாக விலைவாசி உயர்ந்து வருகிறது. வேலையில்லா தீண்டாட்டமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மோடியரசின் தவறான பொருளாதார திட்டத்தால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சையை நோக்கி செல்கிறது.

இதனால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணவீக்கத்தால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது.

மக்கள் மத்தியில் பிரதமர் மோடியின் பிம்பம் சிதைத்து வருகிறது என C-Voter நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் மோடி அரசு குறித்து C-Voter ஒரு ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

அதில், ”கண்களில் நீர் வரவழைக்கும் அளவில் தொடர்ந்து அளவில் தொடர்ந்து உயரும் பணவீக்கம் இந்தியக் குடும்ப வரவு செலவுத் திட்டங்களை அழுத்தி, செலவு செய்யும் சக்தியை குறைத்துள்ளது. மோடி பிரதமரான பிறகு விலைகள் உயர்ந்துள்ளது. பணவீக்கம் தங்களின் வாழ்க்கைத் தரத்தை பாதித்துள்ளது என மக்கள் கருதுகின்றனர்.

பணவீக்கம் நடுத்தர மக்களையும் அடித்தள மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது. அவர்களது வாழ்க்கைத் தரம் சரிவடைந்துள்ளது. விலைவாசி தாறுமாறாக உயர்ந்து வருவதால் பிரதமர் மோடி மீது மக்களிடையே அதிருப்தி மேலோங்கி வருகிறது.

சில பெரும் பணக்காரர்களுடன் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி நின்றுவிட்டது. அது இந்தியா முழுவதும் பரவலாகவில்லை. தேங்கி நிற்கும் ஊதியங்கள், உயர் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவை எதிர்கால வாய்ப்புகளை மழுங்கடிக்கச் செய்துள்ளது. தங்களது வாழ்க்கை தரம் குறித்து இந்தியர்கள் நம்பிக்கை இழுந்து வருகிறார்கள்.” தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories