இந்தியா

”மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வை அவமதித்த ஒன்றிய அரசு” : ராகுல் காந்தி கண்டனம்!

மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வை ஒன்றிய அரசு அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

”மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வை அவமதித்த ஒன்றிய அரசு” : ராகுல் காந்தி கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா​வின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் ​சிங் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில், மன்மோகன் சிங்கின் இறுதி நிகழ்வை ஒன்றிய அரசு அவமதித்து விட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நிகம்போத் காட்டில் நிகழ்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தியதன் மூலம் தற்போதைய அரசு அவரை முற்றிலும் அவமதித்துள்ளது.

அவர் 10 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக் காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியது.டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும் தனி நினைவிடத்துக்கும் தகுதியானவர். தேசத்தின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்துக்கும் அரசு மரியாதை காட்டியிருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

அதேபோல், பிரியங்கா காந்தி , “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்ய போதிய இடம் வழங்காததன் மூலம், அவரது கண்ணியத்திற்கும், ஆளுமைக்கும் ஒன்றிய அரசு நியாயம் செய்யவில்லை. இறுதி ஊர்வலத்தில் அவரது குடும்பத்தினர் இடம் கிடைக்காமல் போராடுவதையும், கூட்ட நெரிசலில் இடம் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு அஞ்சலி செலுத்துவதையும் பார்த்தபோது வேதனையாக இருந்தது. இறுதிச் சடங்கில் அரசியல் மற்றும் குறுகிய மனப்பான்மைக்கு அப்பாற்பட்டு அரசாங்கம் செயல்பட்டிருக்க வேண்டும்” என விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories