மாநிலங்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, கடந்த ஆறு காலாண்டுகளில் உள்நாட்டு விமான கட்டணம் 40%க்குமேல் அதிகரித்துள்ளது குறித்து தி.மு.க எம்.பி வில்சன் கேள்வி எழுப்பி பேசினார்.
அப்போது வில்சன் MP,"நாட்டிலுள்ள விமான போக்குவரத்து நிறுவனங்கள் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி விமான கட்டணத்தை அதிகரிக்கச் செய்கின்றனர். இதை ஒழுங்குபடுத்துவதற்கு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன?
அதிக விமான நிலையக் கட்டணங்கள் வசூலிப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டு சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அறிக்கை விடுத்துள்ளது, இதற்கு ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும்.
விமான நிலையங்கள் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் தற்போதுள்ள விமான நிலையக் கட்டணங்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.