இந்தியா

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் முடங்கிய IRCTC இணையதள சேவை : பாதிக்கப்பட்ட பொதுமக்கள் !

ரயில்வே துறை சார்பில் செயல்பட்டு வரக்கூடிய IRCTC இணையதள சேவையானது 2 மணி நேரத்திற்கு மேல் முடங்கியது.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் முடங்கிய IRCTC இணையதள சேவை : பாதிக்கப்பட்ட பொதுமக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ரயில் மூலம் பயணம் செய்வதற்கு பயண சீட்டை IRCTC வாயிலாகவே முன்பதிவு செய்ய முடியும். இதன் காரணமாக இந்தியாவில் பல லட்சம் பேர் IRCTC இணையதளத்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த தளம் மூலம் ஒரு நாளில் பல லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது.

இந்த நிலையில், IRCTC இணையதளம் காலை 10 மணி முதல் முடங்கியது. மேலும் சர்வர் பராமரிப்பு காரணமாக ரயில்வே துறையின் இணையதளமான IRCTC சர்வர் முடங்கியுள்ளதாக ரயில்வே துறை சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 2 மணி நேரத்துக்கும் மேல் முடங்கிய IRCTC இணையதள சேவை : பாதிக்கப்பட்ட பொதுமக்கள் !

இதன் 2 காரணமாக பொதுமக்கள் நேரடியாக ரயில்வே துறை சார்பில் இயக்கப்பட்டு வரும் டிக்கெட் கவுண்டர்களுக்கு அதிக அளவில் வருகை புரிந்ததால் அங்கு கூட நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள டிக்கெட் கவுண்டர்களில் சர்வர் முடக்கம் காரணமாக பலரும் பல மணி நேரம் காத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்துக்கு பின்னர் IRCTC இணையதளம் மீண்டும் சீராக செயல்பட தொடங்கியது. இதனை அடுத்து பொதுமக்கள் காத்திருந்து தங்கள் பயண சீட்டினை முன்பதிவு செய்து வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக IRCTC சர்வர் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories