தமிழ்நாட்டு புயல் பாதிப்பு மற்றும் வெள்ள நிவாரணம் குறித்து மாநிலங்களவையில் பேசிய திருச்சி சிவா MP, ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் வரலாறு காணாத அளவு கொட்டித்தீர்த்த கனமழையால் விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழ்நாடு அரசு, போர்க்கால அடிப்படையில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப்பணிகளை முடுக்கிவிட்டதையும் திருச்சி சிவா தெரிவித்தார்.
எனவே, ஃபெஞ்சல் புயலுக்கு இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்றும் திருச்சி சிவா வலியுறுத்தினார். கடந்த முறை ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு 37 ஆயிரம் கோடி ரூபாய் கோரியிருந்ததாகவும், ஆனால், ஒன்றிய அரசு வெறும் 267 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியதை குறிப்பிட்டார்.
எனவே, கடந்த முறைபோன்று இல்லாமல், தமிழ்நாடு அரசு கோரியிருக்கும் 2 ஆயிரம் கோடி ரூபாயை இடைக்கால நிவாரணமாக உடனடியாக வழங்கவேண்டும் என்றும் திருச்சி சிவா வலியுறுத்தினார்.