இந்தியா

”தனியார்மயத்தை நம்பி இருக்கும் இந்திய விமானபோக்குவரத்துத்துறை” : மாநிலங்களவையில் தி.மு.க MP பேச்சு!

இந்திய விமானபோக்குவரத்துத்துறை தனியார் மயத்தை நம்பி இருக்கிறது என மாநிலங்களவையில் கனிமொழி என்.வி.என் சோமு MP குற்றம்சாட்டியுள்ளார்.

”தனியார்மயத்தை நம்பி இருக்கும் இந்திய விமானபோக்குவரத்துத்துறை” : மாநிலங்களவையில் தி.மு.க MP பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாநிலங்களவையில், விமானங்கள் திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தி.மு.க MP கனிமொழி என்.வி.என் சோமு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர்,”இந்திய விமான போக்குவரத்துத்துறை தனியார் மயமாக்கப்படுவதை ஏற்க முடியாது. விமான போக்குவரத்து ஒரு சிலர் கையில் மட்டுமே தற்போது உள்ளது. இதனை மாற்ற வேண்டும்.

இந்தியாவில் விமான பைலட்டுகள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. விமான பயிற்சி கல்லூரிகளை அதிகமாக்க வேண்டும். விமான கட்டணங்களை அடிக்கடி மாற்றி அமைக்கப்படுவதால் பயணிகள் கடும் சிரமங்களை சந்திக்கிறார்கள்.

திருச்சி, கோவை, மதுரைக்கு கூடுதல் விமானங்கள் இயக்க வேண்டும். ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி பேசினார்.

மேலும்,கூடங்குளம் அணு மின்நிலைய பாதுகாப்புக்கு குறித்து தி.மு.க MP கனிமொழி என்.வி.என் சோமு மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ஜிஜேந்திர சிங், ”அணு மின்நிலையங்களில், அணுக்களின் கழிவுகள் சில மாதங்கள் அந்தந்த அணு மின்நிலையங்களில் பாதுகாக்கக்கப்பட்டு பின்னர் அகற்றப்படுகிறது. கல்பாக்கத்தில் வேறு அணுமின்நிலைய கழிவுகள் பாதுகாக்கப்படவில்லை." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories