இந்தியா

மணிப்பூரில் அமைதி கோரி போராட்டக்களத்தில் இறங்கிய மாணவர்கள் : ஆளுமை தோல்வியில் பா.ஜ.க!

ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும், உறவுகளையும் இழக்க நேரிட்டுள்ளது. எனினும், இதில் குளிர் காயவே விரும்பி வரும் பா.ஜ.க, வன்முறையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தாமதப்படுத்தி வருகிறது.

மணிப்பூரில் அமைதி கோரி போராட்டக்களத்தில் இறங்கிய மாணவர்கள் : ஆளுமை தோல்வியில் பா.ஜ.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்த பிறகு, பிரிவினையும், அதனால் ஏற்படும் வன்முறைகளும் உச்சம் தொட்டுள்ளன.

இதனால், இந்தியாவிலேயே மக்களாட்சி கடமையாற்றுவதில் அதாவது வாக்களிப்பில் முக்கிய பங்கு வகித்த மணிப்பூர் மக்கள், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தங்களது முழு ஈடுபாட்டை செலுத்த இயலாமல் போனது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளையும், உறவுகளையும் இழக்க நேரிட்டுள்ளது. எனினும், இதில் குளிர் காயவே விரும்பி வரும் பா.ஜ.க, வன்முறையை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தாமதப்படுத்தி வருகிறது.

மணிப்பூரில் அமைதி கோரி போராட்டக்களத்தில் இறங்கிய மாணவர்கள் : ஆளுமை தோல்வியில் பா.ஜ.க!

இந்நிலையில், சுமார் 1 ஆண்டிற்கும் மேலாக தொடரும் மணிப்பூர் வன்முறை, கடந்த ஒரு வாரத்தில் கூடுதலாகியுள்ளது. அதன் விளைவாக, செப்டம்பர் 1 - செப்டம்பர் 9க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 11 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, மணிப்பூர் மாணவர்களே அமைதி கோரி போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். பா.ஜ.க அரசின் ஆளுமை தோல்வியைக் கண்டித்து, ராஜ் பவனை முற்றுகையிட்டனர் மாணவர்கள். இதன் வழி, மணிப்பூரில் பதற்றம் அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories