இந்தியா

மல்லையா கூட்டணியில் புதிய நபர்... தள்ளுபடியான ஜாமீன் மனு... துபாய்க்கு தப்பியோடிய பூஜா கெட்கர்!

மல்லையா கூட்டணியில் புதிய நபர்... தள்ளுபடியான ஜாமீன் மனு... துபாய்க்கு தப்பியோடிய பூஜா கெட்கர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா கெட்கர். இவர் கட்ந்த 2022-ம் ஆண்டு UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று, 2023-ல் பணி நியமனம் பெற்றார். இந்த சூழலில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனி அறை மற்றும் கேபின் கேட்டதுடன், தனது காரில் சட்டத்துக்கு புறம்பாக சிவப்பு சுழல் விளக்கை பொருத்தியுள்ளார்.

இதனால் இவர் மீது புகார் எழவே, இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது இவர் போலி சான்றிதழ் கொடுத்து பணி நியமனம் பெற்றுள்ளது தெரியவந்தது. அதாவது, பூஜா கெட்கர், தான் கண் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி என்றும், OBC பிரிவை சேர்ந்தவர் என்றும் போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலமானது.

மல்லையா கூட்டணியில் புதிய நபர்... தள்ளுபடியான ஜாமீன் மனு... துபாய்க்கு தப்பியோடிய பூஜா கெட்கர்!

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அவரை பதவியில் இருந்து திரும்பெறுவதாக மகாராஷ்டிர அரசுக்கு ஒன்றிய அரசு தெரிவித்தது. மேலும் UPSC பூஜா கெட்கரின் தேர்ச்சி தகுதியை நீக்கி உத்தரவிட்டது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் முறை தேர்வு எழுதி அவர் தேர்ச்சி பெற்றதும், அதற்காக தனது பெயர் பெற்றோரின் பெயரை மாற்றி ஆவணங்கள் சமர்ப்பித்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனால் அவர் இனி UPSC தேர்வு எழுத முடியாதபடி வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

மல்லையா கூட்டணியில் புதிய நபர்... தள்ளுபடியான ஜாமீன் மனு... துபாய்க்கு தப்பியோடிய பூஜா கெட்கர்!

இப்படி தொடர்ந்து அடுக்கடுக்கான புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வந்த நிலையில், முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் முறைகேடு செய்து ஐஏஎஸ் பணி நியமனம் பெற்றதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதால், அவரது முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த சூழலில் தற்போது அவர் துபாய்க்கு சென்றுள்ளார்.

முறைகேடு வழக்கில் இருந்து தப்பிக்க வெளிநாடு தப்பியோடிய பூஜா கெட்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பாஜக அரசு வேடிக்கை பார்ப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் கேரளா காங்கிரஸ் தனது சமூக வலைதள பக்கத்தில், "மல்லையா, நீரவ் மோடி, சோக்சி ஆகியோரின் கூட்டணியில் மற்றொருவரும் சேர்ந்துவிட்டார். இதனை அமித்ஷாவின் அமலாக்கத்துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு என அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்" என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளது.

banner

Related Stories

Related Stories