இந்தியா

விவசாயிகளுக்கு வழங்கும் பயிர் காப்பீட்டு நிதியை குறைந்த ஒன்றிய பாஜக அரசு : விவசாயிகள் அதிர்ச்சி !

பிரதமரின் ஃபைசல் பீமா திட்டத்தின் கீழ் பயிர்களுக்கான காப்பீட்டு தொகை இந்த ஆண்டு குறைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு வழங்கும் பயிர் காப்பீட்டு நிதியை குறைந்த ஒன்றிய பாஜக அரசு : விவசாயிகள் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. காப்பீடு மேற்கொள்ளும் விவசாயிகளின் பயிர் மழை அல்லது வறட்சியால் சேதமடைந்தால் அதற்காக இழப்பீட்டை காப்பீடு மூலம் பெற்ற வந்தனர்.

இது விவசாயிகளுக்கு பல்வேறு வகையில் உபயோகமாக இருந்துவந்த நிலையில், பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அதில் ஏராளமான சிக்கல்கள் எழுந்தன. இந்த நிலையில்,பிரதமரின் ஃபைசல் பீமா திட்டத்தின் கீழ் பயிர்களுக்கான காப்பீட்டு தொகை கடந்த ஆண்டு 14,619 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு 9,890 கோடியாக குறைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கு வழங்கும் பயிர் காப்பீட்டு நிதியை குறைந்த ஒன்றிய பாஜக அரசு : விவசாயிகள் அதிர்ச்சி !

பிரதமரின் ஃபைசல் பீமா திட்டத்தின் கீழ் பயிர்களுக்கான காப்பீடு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு காப்பீட்டு தொகை 14,619 கோடியாக இருந்த நிலையில் இந்த ஆண்டு அது 9,890 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் வருவாய் குறைந்ததால் இந்த குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விவசாய காப்பீட்டு நிறுவனம், ஓரியண்டல் இன்சூரன்ஸ், பாரத ஸ்டேட் வங்கியின் ஜெனரல் இன்சூரன்ஸ், நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஆகிய 4 நிறுவனங்கள் தான் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.

இந்த ஆண்டு கடும் வெயில், திடீர் கன மழை, உள்ள பெருக்கு, உரிய விலை கிடைக்காதது ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு காப்பீட்டு குறைப்பு மேலும் பாதிப்பை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories