இந்தியா

விஷச்சாராய பலி : இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் தான் முதலிடம்!

இந்தியாவிலேயே விஷச்சாராய உயிரிழப்பில் பா.ஜ.க ஆட்சி செய்யும் குஜராத் மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது.

விஷச்சாராய பலி : இந்தியாவிலேயே குஜராத் மாநிலம் தான் முதலிடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அதிரடியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டது. விஷச்சாராயம் ஏற்ற குற்றவாளிகளை விரைந்து கைது செய்யப்பட்டனர். மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதேபோல் உயிரிழந்தவர் குடும்பத்திற்கும், பாதிக்கப்பட்டவருக்கும் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.

இப்படி தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இப்பிரச்சனையை வேண்டும் என்றே பா.ஜ.கவும், அ.தி.மு.க-வும் அரசியலாக்கி வருகிறது. இந்நிலையில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில்தான் அதிகமான விஷச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.

ஒன்றிய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கையின்படி, 2017-இல்மத்தியப் பிரதேசத்தில் 216 பேரும், அரியானாவில் 135 பேரும், சத்தீஸ்கரில் 104 பேரும் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 2018ல் மத்தியப் பிரதேசத்தில் 410 பேரும்,அரியானாவில் 162 பேரும், ராஜஸ்தானில் 64 பேரும் உயிரிழந்தனர்.

2019-ல் மத்தியப் பிரதேசத்தில் 190 பேரும், சத்தீஸ்கரில் 115 பேரும், அசாமில் 98 பேரும், ராஜஸ்தானில் 88 பேரும் உயிரிழந்தனர். 2020-இல் மத்தியப் பிரதேசத்தில் 214 பேர் உயிரிழந்துள்ளனர். 2021-ல் உத்தரப் பிரதேசத்தில் 137 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 108 பேரும், ராஜஸ்தானில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில்தான் 500க்கும் மேற்போட்டார் விஷச்சாராயத்தினால் உயிரிழந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மஜுர்காம், நகவ் பகுதிகளில் 2009 ஜூலையில் கள்ளச் சாராயத்துக்கு 136 பேர் பலியானபோது அங்கே மோடிதான் முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories