இந்தியா

சமத்துவ - சமூக நீதியில் முன்னோடியாக இந்தியா கூட்டணி மாநிலங்கள் : பின்தங்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்!

காலங்கள் கூட கூட, தமிழ்நாட்டின் சாதனைகளும் கூடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுடன் நட்பு பாராட்டும் மாநிலங்களின் சாதனைகளும் கூடிக்கொண்டிருக்கிறது.

சமத்துவ - சமூக நீதியில்  முன்னோடியாக இந்தியா கூட்டணி மாநிலங்கள் : பின்தங்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவு நிலவரப்படி, NDA கூட்டணி ஆட்சியின் கீழ், 19 மாநிலங்களும், ஒரு யூனியம் பிரதேசமும் இருக்கிறது.

இந்தியா கூட்டணி ஆட்சியின் கீழ் 8 மாநிலங்களும் 1 யூனியன் பிரதேசமும் இருக்கிறது.

எனினும், நாடாளுமன்ற முடிவுகள், இந்தியா கூட்டணிக்கும், NDA கூட்டணிக்கும் பெரிதளவில் வேறுபாடு இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.

NDA கூட்டணி ஆட்சியில் இருக்கும் மணிப்பூர், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்களில் கூட, அதிக இடங்களை பெற்ற கூட்டணி, இந்தியா கூட்டணியாகவே இருக்கிறது.

அதற்கு காரணம், NDA ஆட்சியில் அதிகரித்து வரும் அநீதிகளும், சமத்துவமின்மையுமே.


அதற்கு முற்றிலும் எதிராய், சமூகநீதியின் வழி, சமத்துவத்தை வென்ற மாநிலங்களாக விளங்குகிறது இந்தியா கூட்டணி ஆட்சி வகிக்கும் மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு.

தமிழ்நாட்டில், தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி, 39க்கு 39 இடங்கள் பெற்று, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அதற்கு காரணம், தி.மு.க ஆட்சியில் அதிகரித்து வரும் சமூகநீதிகளும், சமத்துவமுமே.

இந்தியாவிலேயே மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியடைந்துள்ள மாநிலமும், அதிகப்படியான தொழிற்சாலைகள் அமைந்துள்ள மாநிலமும், கல்வியில் சமத்துவம் அதிகம் இருக்கும் மாநிலமும், குற்றங்கள் குறைவாக நடக்கும் மாநிலமும், பிரிவினைவாதம் தலைதூக்காத மாநிலமும், மத அரசியல் காலூன்ற இயலாத மாநிலமுமாக தமிழ்நாடு விளங்குகிறது.

சமத்துவ - சமூக நீதியில்  முன்னோடியாக இந்தியா கூட்டணி மாநிலங்கள் : பின்தங்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்!

அதுவும் குறிப்பாக, ஒன்றியத்தின் பாகுபாடுடைய நிதி பகிர்வின் போதும், இத்தகைய வரலாற்று வளர்ச்சியடைந்துள்ளது தமிழ்நாடு.

ஒன்றிய பா.ஜ.க அரசு, மதவாத அரசியலை பரப்பும் நோக்கில், ஜனநாயகத்தை குழைக்கும் நோக்கில், குஜராத்தில் 26 ஆண்டுகளுக்கு மேலாகவும், உத்தரப் பிரதேசத்தில் 7 ஆண்டுகளுக்கு மேலாகவும், மணிப்பூரில் 7 ஆண்டுகளாகவும் ஆட்சிபுரியும் வேளையில்,

அம்மாநிலங்களுக்கு, ஒன்றிய அரசு வரித்தொகை பகிர்வதும் ஏராளம், முதலீடுகளை மற்ற மாநிலங்களிலிருந்து பறித்து, பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கு தருவதும் ஏராளம்.

எனினும், தமிழ்நாட்டில் நிலைக்கு அடுத்து கூட வர இயலவில்லை. காரணம், சமூக நீதி. சமூக நீதியால் பெறப்படும் கல்வி.

எதனையும், கூர்ந்து ஆராய்ந்து செயல்படுத்துதல் ஆகியவையே, தமிழ்நாடு கற்றுத்தந்திருக்கிற பாடம்.

அதன் காரணமாகவே, உத்தரப் பிரதேச மக்களவை தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருக்கிற அகிலேஷ் யாதவ் கூட, நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழ்நாட்டை பின் தொடர்கிறோம் என வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறார்.

டெல்லியில் ஆட்சி செய்யும் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டின் திட்டங்களை டெல்லியில் செயல்படுத்துகிறது.

உழைக்கும் சமுதாய பெண்களுக்கு, மாதம் ஒரு முறை ஊக்கத்தொகை என்ற திராவிட மாடல் திட்டத்தை, தேர்தல் அறிக்கையில் இடம்பெற செய்தது காங்கிரஸ்.

சமத்துவ - சமூக நீதியில்  முன்னோடியாக இந்தியா கூட்டணி மாநிலங்கள் : பின்தங்கும் பா.ஜ.க ஆளும் மாநிலங்கள்!

இதனால், மற்ற மாநிலங்களுக்கும், மற்ற மாநில கட்சிகளுக்கும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக மாற்றம் கண்டிருக்கிறது தமிழ்நாடு.

பொருளாதாரத்தில் இரண்டாம் இடம் பிடிக்க காரணம், இந்திய பங்கு சந்தை காரணம் காட்டி, முதலீடு செய்யும் பன்னாட்டு நிருவனங்களுக்கான முதன்மை இடமாக காட்சிப்படுத்தப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா இருப்பது.

எனவே, பன்னாட்டு குழுமங்களின் இந்திய தலைமை இடம் மகாராஷ்டிரத்தில் அமையப்பெறுகின்றன. அதனால், தொழில் நுட்ப அளவில், தமிழ்நாடு பெருமளவு பங்களித்தும், முதன்மை இடம், மகாராஷ்டிரத்திடம் செல்கிறது. இல்லையேல், அதிலும், தமிழ்நாடே முதலிடம் வகிக்கும்.

இவ்வாறு எதிலும் முதலிடம் என்ற வெற்றிப்பாதையில் சென்றுகொண்டிருக்கும் தமிழ்நாடும், மற்ற இந்தியா கூட்டணி மாநிலங்களும் தொடர்ச்சியாக முன்னேறுவதை கண்ட, NDA கூட்டணி ஆட்சியின் கீழ் இருக்கும் மக்கள், தங்களது விருப்பத்தை இந்தியா கூட்டணி பக்கம் திருப்பியுள்ளனர்.

அதற்கு காரணமாக தான், மோடியின் முகமும் வாடத்தொடங்கி, வெற்றி பெற்றும் தோல்வி விரக்தியடைந்து வருகிறார்.

banner

Related Stories

Related Stories