உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை ஆதரித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய பிரியங்கா காந்தி, ” பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்து - முஸ்லீம் அரசயலை மட்டுமே செய்துள்ளார். மதத்தின் பெயரால் வாக்குகளை பெற்றுவிடலாம் என நினைத்து மக்களுக்காக உழைப்பதை பற்றி பிரதமர் மோடி கவலைப்படவில்லை. ஒரு புதிய அரசியலை உருவாக்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற பிரச்சாரத்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடி மக்களை நேரில் சந்திப்பதே இல்லை. பிரச்சார மேடையில் இருந்து இறங்கி மக்களை சந்திப்பதில்லை.
ஒரு சில பணக்காரர்களுக்காக ரூ.16 லட்சம் மதிப்பிலான கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்கிறார். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தால் அரசிடம் பணம் இல்லை என்று சொல்கிறார்" என தெரிவித்துள்ளார்.