இந்தியா

”மோடி தோற்காவிட்டால் நாடு கருப்பு நாட்களை பார்க்கும்” : உத்தவ் தாக்ரே எச்சரிக்கை!

மோடி அரசு மீண்டும் வெற்றி பெற்றுவிட்டால் நாடு கருப்பு நாட்களை காணும் என உத்தவ் தாக்ரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

”மோடி தோற்காவிட்டால் நாடு கருப்பு நாட்களை பார்க்கும்” : உத்தவ் தாக்ரே எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே பிரதமர் மோடியின் உத்தரவாதம். அனைத்து தூசி மற்றும் அழுக்கை உறிஞ்சும் ஒரு வேக்யூம் கிளீனரை போல பா.ஜ.க கட்சி அனைத்து ஊழல்வாதிகளையும் தனது கட்சியில் சேர்த்துக்கொள்கிறது என உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, சாம்னா நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில், "மகாபாரதத்தில் திரௌபதியின் ஆடையை கழற்றியதுபோல நாட்டின் ஜனநாயகம் கழற்றப்படுகிறது.

சிவசேனாவின் தேர்தல் சின்னம் ஏக்நாத் ஹிண்டே தலைமைக்கு வழங்கப்பட்டத்தில் முன்னாள் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஹிண்டே அணிக்கு சென்ற எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு பலமுறை நினைவூட்டப்பட்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை.

உச்சநீதிமன்றம் இன்னும் சின்னம் குறித்துத் தீர்ப்பு வழங்காத நிலையில் எங்களைப் பிரதமர் மோடி விமர்சிக்கிறார். தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது இதிலிருந்து தெரிகிறது.

பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகளை 2019ல் மறந்துவிட்டார். பிறகு 2019ல் அளித்த வாக்குறுதிகளை இப்போது மறந்துவிட்டார். ஒலு சிலரை சில நேரம் முட்டாளாக்க முடியும். ஆனால் எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது.

இந்த மக்களவை தேர்தலில் மக்கள் தங்கள் தலைவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பார்கள். மோடி அரசு தோற்றால்தான் நாட்டின் எதிர்காலம் செழிப்பாக இருக்கும். நாடு அமைதியாக இருக்கும். ஒரு வேலை மீண்டும் மோடி அரசு வெற்றி பெற்றுவிட்டால் நாடு கருப்பு நாட்களைக் காணும்.

ஊழல்வாதிகளைப் பாதுகாப்பதே பிரதமர் மோடியின் உத்தரவாதம். அனைத்து தூசி மற்றும் அழுக்கை உறிஞ்சும் ஒரு வேக்யூம் கிளீனரை போல பா.ஜ.க கட்சி அனைத்து ஊழல்வாதிகளையும் தனது கட்சியில் சேர்த்துக்கொள்கிறது. தேர்தலில் தங்களது சாதனைகளைக் கூற எதுவும் இல்லாததால் பிரச்சாரத்தில் ராமரை முன்னிறுத்தி வாக்கு கேட்கிறது பா.ஜ.க” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories