இந்தியா

4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! : 22 நாட்களில் தேர்தல் முடிவு!

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் 4 கட்டங்கள் நிறைவுற்றது.

4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! : 22 நாட்களில் தேர்தல் முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதெசங்களில் நடைபெறும், நாடாளுமன்ற மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,

முதல் 3 கட்ட வாக்குப்பதிவு நிறைவுற்று, இன்று (13.05.24) மாலை 6 மணியுடன் 4ஆம் கட்ட வாக்குப்பதிவும் நிறைவுற்றது.

இந்த முதல் 4 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுகளின் போதே, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல்களுக்கான வாக்குப்பதிவும் நிறைவுற்றுள்ளது.

4-ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு! : 22 நாட்களில் தேர்தல் முடிவு!

4ஆம் கட்ட மக்களவை தேர்தலில், ஆங்காங்கே வன்முறை வெடித்த நிலையிலும், பா.ஜ.க.வினர் சில இடங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையிலும், மாலை 6 மணியுடன்,

ஆந்திரா, பீகார், ஒடிசா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவுற்றது.

மேலும், 3 கட்ட வாக்குப்பதிவுகள் நிலுவையில் இருக்கிற நிலையில், ஜுன் 4 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories