இந்தியா

”சர்வாதிகாரியாக செயல்படும் மோடியிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்” : அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!

சர்வாதிகாரி போல் பிரதமர் மோடி செயல்படுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

”சர்வாதிகாரியாக செயல்படும் மோடியிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும்” : அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் இன்று தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய கெஜ்ரிவால், ” ஆம் ஆத்மி கட்சி வரலாறு காணாத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெல்லியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு எங்களைத் தோற்கடிக்க முடியது என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் தான் கைது செய்யப்பட்டபோது என்னை ராஜினமாக செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுத்தார்கள். ஆம் ஆத்மி கட்சியைக் கவிழ்க்கச் சதி செய்தனர்.

ஆனால் நான் ராஜினாமா செய்ய மாட்டேன். சிறையிலிருந்தே ஆட்சி செய்வேன் என துணிச்சலுடன் கூறினேன். ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும். அந்த அரசாங்கத்தில் ஆம் ஆத்மி கட்சி அங்கம் வகிக்கும்.

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவோம். அப்போது டெல்லி மக்கள்தான் ஆளுநராக இருப்பார்கள். குஜராத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆம் ஆத்மி கட்சியைச் சிதைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மோடி எடுத்தார். ஆனால் அவர்களது சூழ்ச்சிகளை முறியடித்து ஆம் ஆத்மி கட்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்தியா கூட்டணியில் யார் பிரதமராவார் என எல்லோரும் கேட்கிறார்கள். நான் பா.ஜ.கவை கேட்கிறேன். யார் உங்களின் பிரதமர் வேட்பாளர்?. பா.ஜ.கவில் 75 வயதானதும் ஓய்வு பெற வேண்டும். இந்த வருடம் மோடிக்கு 75 வயதாகிறது. எனவே பா.ஜ.க அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் முதலில் யோகி ஆதித்யநாத்தை வெளியேற்றுவார்கள். அமித்ஷாவை பிரதமர் ஆக்குவார்கள்.

ஊழலை முறியடிப்பதாகக் கூறும் பிரதமர் மோடி, ஊழல்வாதிகள், பாலியல் குற்றவாளிகளைக் கட்சியில் இணைத்துள்ளார். மோடி மீண்டும் வெற்றி பெற்றால் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரையும் சிறைக்கு அனுப்புவார். சர்வாதிகாரி போல் செயல்படும் பிரதமர் மோடியிடம் இருந்து நாட்டை காக்க வேண்டும் " என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories