இந்தியா

”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!

அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய மோடி நினைப்பதாக ராகுல் காந்தி எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

”அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய நினைக்கும் மோடி” : ராகுல் காந்தி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிற்படுத்தப்பட்டோர், ஆதிவாசிகள், தலித்துகளுக்காக இட ஒதுக்கீடு உரிமைகளைப் பாதுகாக்க அரசியல் சாசனத்தைக் காப்பாற்றுவது மிகவும் முக்கியமானது என ராகுல் காந்தி எம்.பி தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை எடுத்து பொதுமக்களிடம் காண்பித்து, இது ஒரு சாதாரண புத்தகம் அல்ல. ஆதிவாசிகள், தலித்துகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைகளின் குரல் என கூறினார்.

மேலும் பேசிய ராகுல் காந்தி, " இட ஒதுக்கீடு, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்து உரிமைகளும் அரசியலமைப்பு சட்டத்தால் மட்டுமே வழங்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அனைவருக்கும் முக்கியமானது.

அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என்று பா.ஜ.க தலைவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்கள். அரசியல் சாசனம் இல்லாமல் நாட்டை ஆட்சி செய்ய மோடி விரும்புகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றாகத் தேர்தலில் போட்டியிடுகிறது” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories