இந்தியா

இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறை இன்றுடன் ஓராண்டு தொடர்கிறது.

இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூரில் பெரும்பான்மை சமூகமாக இருக்கும் மெய்தி பிரிவினர் ST இட ஒதுக்கீட்டில் சேர்க்க நீதிமன்றம் அரசுக்கு ஆணைப் பிறப்பித்தது. இதனால் குக்கி பழங்குடியின சமூகத்தினர் தங்களது இட ஒதுக்கீடு பாதிக்கப்படும் என கோரிக்கையை முன்வைத்துக் கடந்த ஆண்டு மே 3 ஆம் தேதி பேரணி நடத்தினர்.

இந்த பேரணியில் வெடித்த வன்முறைதான் இன்றுவரை நீடித்து வருகிறது. மெய்தி சமூகத்தினரால் குக்கி பிரிவினர் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள். தங்கள் மாநிலத்திலேயே அகதிகள் போல் வாழ்ந்து வருகிறார்கள்.

மேலும் குக்கி பழங்குடியினருக்கு எதிராக, பல பாலியல் துன்புறுத்தல்கள், சித்திரவதைகள் நடந்த காணொளிகள், சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதில் குறிப்பாக பெண்களை அடித்து நிர்வாணமாக அழுத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவமும் அரங்கேறியது. இந்த மிருகத்தனமான செயலுக்கு உலக நாடுகளே கடும் கண்டனங்களைத் தெரிவித்தது.

இருந்தும் இந்த வன்முறையை நிறுத்த எவ்விதமான நடவடிக்கையையும் அம்மாநில பா.ஜ.க அரசும், ஒன்றிய அரசும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் வன்முறை குறித்து இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் மவுனம் காத்தனர். ஏன் மணிப்பூர் பா.ஜ.க எம்.பிகளையே சந்திக்க பிரதமர் மோடி நேரம் கொடுக்கவில்லை. இந்தியா கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பிகள் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரடியாக சென்று அங்கு மக்கள் சந்திக்கும் கொடுமைகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டனர்.

இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

மேலும் ராகுல் காந்தி எம்.பி மணிப்பூர் சென்று அங்குப் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார். ஆனால் மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்டு ஓராண்டாகியும் இது வரை மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட ஒரு நபரை கூட பிரதமர் மோடி சந்திக்கவில்லை. இந்தியாவில்தான் மணிப்பூர் இருக்கிறது என்பதைக் கூட அவர் மறந்துவிட்டார் என்பதைத்தான் அவரது நடவடிக்கைகள் காட்டுகிறது.

ஓராண்டாக நீடித்துவரும் இந்த வன்முறையில் இதுவரை 227 பேர் உயிரிழந்துள்ளனர்.1500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 31 பேர் காணவில்லை. 50 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கிறார்கள். 17 ஆயிரம் பேர் மணிப்பூரை விட்டு வேறு மாநிலங்களுக்குத் தஞ்சமடைந்துள்ளனர். 13 ஆயிரம் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

இப்படி மணிப்பூர் மாநிலம் ஓராண்டாக எரிந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நெருப்பை அணைக்காமல் ஒன்றிய அரசு மவுனமாக வேடிக்கைபார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories