இந்தியா

”மோடி ஆட்சியில் மக்களுக்கு தண்டனையாக மாறிய ரயில் பயணங்கள்” : ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

மோடி ஆட்சியில் ரயில் பயணங்கள் மக்களுக்கு தண்டனையாக மாறியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”மோடி ஆட்சியில் மக்களுக்கு தண்டனையாக மாறிய ரயில் பயணங்கள்” : ராகுல்காந்தி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் மிகவும் முக்கியமான போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில்வேதுறை. வெவ்வேறு மாநிலங்களுக்கு வேலைக்காவும், கல்விக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும் பயணிப்பவர்களின் முதல் தேர்வாக ரயில்தான் இருந்து வருகிறது. நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இணைக்கக்கூடிய வகையில் ரயில் நிலையங்கள் உள்ளன.

ஆனால் பா.ஜ.க ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையை மேம்படுத்தாததால், புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகிறார்கள். ரயில்களில் போதுமான முன்பதிவு பெட்டிகள் இல்லாததால் புலம் பெயர் தொழிலாளர்கள் அனைத்துப்பெட்டிகளிலும் செல்கிறார்கள்.

இப்படி செல்லும்போது பதிவு செய்து செல்வர்களுக்கும் இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் இதை மோடி அரசு சரி செய்யாமல் தொழிலாளர்களைக் குற்றம்சாட்டி வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் ரயில் பயணிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. போதுமான முன்பதிவு பெட்டிகள் இல்லாததால், அனைத்து பெட்டிகளிலும் பயணிகள், பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பயணிகள் பலரும் தங்களது பயண கஷ்டங்களை வீடியோவாக எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லை என ரயில்வே துறை வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த வீடியோவை தொடர்ந்து ரயில்வே துறையை அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைவரும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரேந்திர மோடி ஆட்சியில் ரயில் பயணங்கள் கூட தண்டனையாக உள்ளதாகக் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, "நரேந்திர மோடி ஆட்சியில் ரயில் பயணங்கள் கூட தண்டனையாக உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கைகளைக் குறைத்துவிட்டு, எலைட் ரயில்களை மட்டும் பிரபலப்படுத்துவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இதனால் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க முடியாத நிலை உருவாக்கி உள்ளது.

சாமானிய மக்கள் தரைகளிலும், கழிப்பறைகளிலும் மறைந்து பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மோடி அரசின் கொள்கைகளால், ரயில்வேத்துறையை நலிவடையச் செய்து, திறமையற்றதாக நிரூபித்து, நண்பர்களுக்கு விற்பனை செய்ய உள்ளது. சாமானிய மக்களின் ரயில் பயணத்தைக் காக்க வேண்டும் என்றும், தவறான கொள்கைகளால் ரயில்வேத்துறையை நிர்மூலம் ஆக்கும் மோடி அரசை நிச்சயம் அகற்றிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories