இந்தியா

பா.ஜ.க செய்த வளர்ச்சிகள் என்ன? : 10 ஆண்டுகளை வீணாக்கிய மோடி அரசு!

எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதில் காட்டுகிற ஆர்வத்தை, நாட்டின் வளர்ச்சிக்கு காட்டியிருந்தால், முன்னேறியிருக்கலாம்.

பா.ஜ.க செய்த வளர்ச்சிகள் என்ன? : 10 ஆண்டுகளை வீணாக்கிய மோடி அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

2014-இல் ஆட்சியை பிடிப்பதற்காக, பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்த பா.ஜ.க, ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் வளர்ச்சிப்பாதைக்கு நாட்டை கொண்டு செல்லாமல் இருக்கிறது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், நாட்டின் நிலை, வீழ்ச்சியை தான் கண்டுள்ளது. இந்தியாவின் கடன் ரூ. 49 இலட்சம் கோடி இலிருந்து ரூ. 205 இலட்சம் கோடியாக உயர்ந்து, மக்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.

எனினும், 10 ஆண்டுகள் கழித்து, ஆட்சியை தக்கவைத்து கொள்ள பிரச்சாரம் மேற்கொள்ளும் மோடியும், அவரது கட்சிக்காரர்களும், சர்வாதிகாரத்தை எவ்வாறு நிலைநாட்டுவது என்று தான் சிந்திக்கிறார்களே தவிர, நாட்டை வளர்ப்பது எப்படி என்பதை இன்றளவும் சிந்திக்க தவறுகின்றனர்.

இதுகுறித்து, இராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஷ்வி, “வேலைவாய்ப்பின்மை, விவசாயிகளின் சிக்கல், பணவீக்கம், வறுமை, பீகாருக்கு சிறப்பு தகுதி குறித்த கேள்வி எழும்போதெல்லாம், அதற்கு பதிலளிக்காமல், மோடி அரசு செய்த வளர்ச்சியை தெரிவிக்காமல், எதிர்க்கட்சிகளை சாடி வருவதையே வழக்கமாக வைத்துள்ளார் மோடி” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

மோடி ஆட்சியில் தமிழும், தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் புறக்கணிக்கப்பட்டாலும், தனது அரசியல் இலாபத்திற்காக, தேர்தல் நேரங்களில் மட்டும் தமிழ்நாடு வருகை தருகிற மோடி, சிறந்த ஆட்சிபுரிகிற தி.மு.க, தமக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதால்,

பிரச்சார மேடைகளில் தி.மு.க.வை விமர்சிப்பதையே முழு நோக்கமாக வைத்துள்ளாரே தவிர, தமிழ்நாட்டிற்கு செய்த நன்மை எதையும் பேச முன்வர மறுக்கிறார்.

பா.ஜ.க செய்த வளர்ச்சிகள் என்ன? : 10 ஆண்டுகளை வீணாக்கிய மோடி அரசு!

காரணம், அவ்வாறு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதேனும் செய்திருந்தால் தானே, மோடியால் அது குறித்து பேச இயலும்.

இந்நிலையில், மோடியின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், உரிமையிழப்பு ஆகியவை அதிகரித்துள்ளது என்ற முழக்கத்தை எதிர்க்கட்சிகள் முன்வைத்தால், “ஆதாரமற்று பேசுகிறார்கள்” என தட்டிக்கழிக்கிறார் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

அதற்கு விடையளிக்கும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பிரவீன் சக்கரவர்தி, “உலக வங்கி மற்றும் மற்ற பல்கலைக்கழகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் 42% பட்டதாரிகளுக்கு வேலை இல்லாத சூழல் உள்ளது. இதற்கு என்ன மழுப்பல் தெரிவிக்க போகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு, காரணமற்று தட்டிக்கழிக்கும் பா.ஜ.க.வின் போக்கிற்கு, மூக்குடைப்புகள் அதிகரித்து வரும் நிலையிலும், கவலையற்று புதிய புதிய மூக்குகளை பொறுத்தி வருகிற பா.ஜ.க.வின் செயல் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories