இந்தியா

கேரளாவின் தேவாலயத்தில் திரையிடப்பட்ட ‘மணிப்பூர் கலவர ஸ்டோரி’ : ‘தி கேரள ஸ்டோரி’ பட விவகாரத்தில் பதிலடி !

கேரளாவின் தேவாலயத்தில் திரையிடப்பட்ட ‘மணிப்பூர் கலவர ஸ்டோரி’ :  ‘தி கேரள ஸ்டோரி’ பட விவகாரத்தில் பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மேற்கு வங்கத்தை சேர்ந்த பிரபல இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த ஆண்டு (2023) வெளியான திரைப்படம் தான் ‘தி கேரளா ஸ்டோரி’. சிறுபான்மையின மக்களான இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் விதமாக அமைந்துள்ள இந்த படத்துக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்தது. எனினும் இந்த படம் வெளியானது.

கேரளாவில் 2 மாற்று மத பெண்களை, இஸ்லாமிய பெண் உதவியோடு மதமாற்ற செய்யும்படி செய்கின்றனர். அதற்கேற்றாற்போல் ஒரு சூழலை உருவாக்கி நம்மை இவரால் மட்டும்தான் காப்பாற்றமுடியும் என்று அந்த பெண்களை நம்பவைத்து, ஹிஜாப் அணியவைத்து அப்படியே மதம் மாற்றம் செய்கின்றனர். பின்னர் அவர்களுக்கு இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்ய வைத்து, அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு ISIS அமைப்பில் இணைத்து விடுகின்றனர்.

கேரளாவின் தேவாலயத்தில் திரையிடப்பட்ட ‘மணிப்பூர் கலவர ஸ்டோரி’ :  ‘தி கேரள ஸ்டோரி’ பட விவகாரத்தில் பதிலடி !

மேலும் இது ஒரு உண்மை கதை என்றும், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ISIS அமைப்பில் இணைக்கப்படுவதாகவும் படக்குழுவினரின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்தது.

'லவ் ஜிகாத்'தை வெளிப்படுத்துவதாக கூறி, ஒரு மதத்துக்கு எதிராக வெறுப்புணர்வை விதைக்கும் இந்த படத்துக்கு கேரள அரசும் தடை விதித்திருந்தது. இந்த சூழலில் தற்போது மீண்டும் இந்த படம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த வாரம் அரசு தொலைக்காட்சியான தூர்தர்சன் தொலைக்காட்சியில் இந்த படம் ஒளிபரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கேரளாவின் தேவாலயத்தில் திரையிடப்பட்ட ‘மணிப்பூர் கலவர ஸ்டோரி’ :  ‘தி கேரள ஸ்டோரி’ பட விவகாரத்தில் பதிலடி !

இதற்கும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இதையும் மீறி படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற மதத்தை வைத்து எந்த விஷயத்தையும் மேற்கொள்ளக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு இந்த படம் சில ஆன்மிகம் சார்ந்த இடங்களிலும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் இந்த படம் ஒளிபரப்பப்பட்டதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், கேரளாவை சேர்ந்த சில தேவாலய நிர்வாகிகள், மணிப்பூர் கலவரம் பற்றிய உண்மை படத்தை தேவாலயங்களில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கேரளாவின் அங்கமாலி மறைமாவட்டத்தின் கீழ் உள்ள தேவாலயங்கலில் மணிப்பூர் ஸ்டோரி ஆவணப்படத்தை திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. கொச்சியில் உள்ள ஜான்ஜோசுபுரம் தேவாலயத்தில் இன்று திரையிடப்படவுள்ளதாக அறிவித்தனர்.

கேரளாவின் தேவாலயத்தில் திரையிடப்பட்ட ‘மணிப்பூர் கலவர ஸ்டோரி’ :  ‘தி கேரள ஸ்டோரி’ பட விவகாரத்தில் பதிலடி !

அதன்படி இன்று கேரளாவின் அங்கமாலியில் உள்ள சஞ்ஜோபுரம் தேவாலயத்தில் 'மணிப்பூர் கலவரம்' தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டது. இதனை அங்கிருந்தவர்கள் கண்டனர். இந்த சம்பவம் குறித்து தற்போது பலரும் பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, “கற்பனையான ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிடும்போது, ஏன் உண்மை சம்பவமான ‘மணிப்பூர் கலவர ஸ்டோரி’யை மக்களுக்கு காண்பிக்க கூடாது? மக்கள் மணிப்பூரில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்” என்று தேவாலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories