இந்தியா

குஜராத் தலித் விவசாய குடும்பத்தை ஏமாற்றிய அதானி - பாஜக... தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.11 கோடி மோசடி !

பாஜகவுக்கு 11 கோடி ரூபாய் நன்கொடை அளித்து ஏமாற்றப்பட்ட குஜராத் ஏழை விவசாய குடும்பம் குறித்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் தலித் விவசாய குடும்பத்தை ஏமாற்றிய அதானி - பாஜக... தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.11 கோடி மோசடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2023-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தை சேர்ந்த தலித் குடும்பத்திடம் இருந்து அவர்களுக்கு சொந்தமான நிலத்தை 11.14 கோடி ரூபாய்க்கு அதானி குழுமத்தின் AWEL நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால், அதற்கான தொகையை நேரிடையாக அவர்களிடம் கொடுக்காமல் இருந்துள்ளது.

மேலும், இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் கணக்கில் டெபாசிட் செய்தால் அது குறித்து வருமான வரித்துறை சோதனை நடத்தி அபராதம் வசூலுக்கும் என்று அதானி குழுமம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், அந்த தொகையை தேர்தல் பத்திரமாக மாற்றி வழங்குமாறும் ஆலோசனை கூறியுள்ளது.

மேலும், அந்த தொகையை பாஜகவுக்கு கொடுத்தால் பின்னர் அவர்கள் பணமாக அந்த குடும்பத்துக்கு கொடுப்பார்கள் என்றும் அதானி நிறுவனம் கூறியுள்ளது. அதானி நிறுவனம் கூறியபடி அந்த தலித் குடும்பமும், 11.14 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கி அதனை பாஜகவுக்கு அளித்துள்ளனர். அதனை பாஜகவும் வங்கியில் செலுத்தி பணமாக மாற்றியுள்ளனர்.

குஜராத் தலித் விவசாய குடும்பத்தை ஏமாற்றிய அதானி - பாஜக... தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.11 கோடி மோசடி !

பின்னர் அந்த தொகையை அந்த தலித் குடும்பம் கேட்ட நிலையில், அந்த குடும்பத்துக்கு பணத்தை வழங்க பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அந்த குடும்பம் உணர்ந்துள்ளது. மேலும், இது குறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், காவல்துறையினர் அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் ஊடகங்களுக்கு தெரியவந்த நிலையில், தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. AWEL நிறுவனத்தின் 4 இயக்குநர்கள், மேலாளர் மகேந்திரசிங் சோதா, பாஜக பிரமுகர் ஹேமந்த் உள்ளிட்டோருக்கு எதிராக அந்த தலித் குடும்பம் புகார் அளித்துள்ளது.

banner

Related Stories

Related Stories