இந்தியா

பிரபல ரௌடி சிறையில் மரணம் : பரபரப்பான உ.பி - 144 தடை உத்தரவு - யார் இந்த முக்தார் அன்சாரி ?

உத்தர பிரதேசத்தில் பிரபல ரௌடியும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

பிரபல ரௌடி சிறையில் மரணம் : பரபரப்பான உ.பி - 144 தடை உத்தரவு - யார் இந்த முக்தார் அன்சாரி ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேசத்தில் பிரபல ரௌடியும், அரசியல்வாதியுமான முக்தார் அன்சாரி (60), கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல்வேறு குற்றங்களின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த சூழலில் நேற்று இரவு கழிவறை சென்றபோது, இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மயங்கி விழவே உடனே, அங்கிருந்த அதிகாரிகள் அவரை மீட்டு சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கே மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை கொடுத்த நிலையில், உயிரிழந்தார். இவரது மறைவையொட்டி உ.பியில் ஒரு சில முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஒரு பக்கம் முக்தார் அன்சாரியின் உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனினும் இவரது மறைவு உ.பியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ரௌடி சிறையில் மரணம் : பரபரப்பான உ.பி - 144 தடை உத்தரவு - யார் இந்த முக்தார் அன்சாரி ?

உத்தர பிரதேசத்தில் பிரபல தாதாவாக அறியப்படுபவர் முக்தார் அன்சாரி. இவரது தாத்தா, அப்பா ஆகியோர் அரசியலில் சிறந்து விளங்கிய நிலையில், இவரும் அரசியலில் கால்பதிக்க எண்ணினார். 90-களில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இவர், பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 1996-ம் ஆண்டு மௌ (Mau) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார்.

அப்போது வெற்றி பெற்ற இவர், அக்கட்சியில் இருந்து விலகி அடுத்தடுத்து 2 முறை அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து Quami Ekta Dal என்ற கட்சியில் இணைந்து போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ-வான நிலையில், அதற்கடுத்து மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஒரே தொகுதியில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார் முக்தார் அன்சாரி.

பிரபல ரௌடி சிறையில் மரணம் : பரபரப்பான உ.பி - 144 தடை உத்தரவு - யார் இந்த முக்தார் அன்சாரி ?

2022-ம் ஆண்டு அதிலிருந்து விலகி பாஜகவின் NDA கூட்டணியான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியில் இணைந்தார். இதனிடையே 2005-ம் ஆண்டு பஞ்சாப் மற்றும் உ.பி-யில் பல்வேறு குற்றங்களில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2008-ம் ஆண்டு கொலை வழக்கு ஒன்றில் சாட்சியத்தை தாக்கியதாக கொடுக்கப்பட்ட புகாரில், அன்சாரி கைது செய்யப்பட்டார். அப்போது பாதிக்கப்பட்ட இவர் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்ற நிலையில், 2017-ல் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2005-ம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணானந்த் ராய் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக, கடந்த 2023-ம் ஆண்டு முக்தார் அன்சாரிக்கு எம்.பி., எம்.எல்.ஏ., நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. கடந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் சிறைக்கு சென்ற இவர், தற்போது சிறையில் வைத்தே மரணமடைந்துள்ளார். இவர் மீது 60-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories