இந்தியா

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் : தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு... உ.பி-யில் பயங்கரம் !

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் : தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு... உ.பி-யில் பயங்கரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கோட்வாலி பகுதியில் 16 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இவர்கள் திடீரென காணாமல் போன நிலையில், அவர்களின் பெற்றோர் இவர்களை தேடியுள்ளனர்.

அப்போது அங்குள்ளமரம் ஒன்றில் இருவரும் தூக்கிட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலிஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து போலிஸார் நடத்திய விசாரணையில், சிறுமிகளை உள்ளூர் ஒப்பந்ததாரரின் 18 வயது மகனும் 19 வயது மருமகனும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. மேலும், இது குறித்து வீடியோக்களை வைத்து இருவரும் சிறுமியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள் : தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு... உ.பி-யில் பயங்கரம் !

இதன் காரணமாக சிறுமிகள் இருவரும் தற்கொலை செய்துகொண்டனர் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம், குற்றவாளிகள் இருவரும் சிறுமியை தூக்கிட்டு கொலை செய்ததாக கிராமமக்கள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கில், ஒப்பந்ததாரர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கூட்டு பலாத்காரம் மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories