இந்தியா

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பரிதவிக்கும் மக்கள் : அரங்கேறும் அநீதி!

பாஜக, தனது குதர்க்கத்தனத்தால் சில மாநிலங்களின் ஆட்சியை கைப்பற்றினாலும், குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தான் மதவாத அரசியல் வெகுவாக படர்ந்து கிடக்கிறது. ஆகையால், ஆதிக்க அதிகாரமும் அதிகரித்துள்ளது.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பரிதவிக்கும் மக்கள் : அரங்கேறும் அநீதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பா.ஜ.க. அரசு, குஜராத்தில் தொடர்ந்து 29 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வரும் நிலையிலும், பொருளாதாரம், கல்வி, சமூக சீர்த்திருத்தம் என அனைத்திலும் வீழ்ச்சியே நீடிக்கிறது. அதே நிலை தான் உத்தரப் பிரதேசத்திலும், ஆட்சி செய்து வருகிற ஆண்டுகள் மட்டுமே இங்கு வேறுபட்டுள்ளன.

மதத்தின் அடிப்படையில் மக்களை ஒன்றுப்படுத்தியே தேர்தலில் வெல்லும் இவர்களின் அரசியல் நோக்கம் சுயநலமானது என்பதை மக்கள் அவ்வப்போது உணர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்களின் மதவாத பிளவுகள் மக்களின் உரிமைகளையும், உடைமைகளையும் உறிஞ்சுவதோடு மட்டுமல்ல அதையும் தாண்டி இருக்கிறது என்பதை தான் அன்மை நிகழ்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

குஜராத் இவ்வளவு முதலீடுகளை ஈட்டியுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இத்தனை திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என பா.ஜ.க அரசும், மோடியின் ஊடகங்களும் தெரிவித்து வரும் நிலையில், வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் தான் உச்சத்தை தொட்டுள்ளது.

முதலீட்டிற்காக, குஜராத்தில் கூட்டப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டின் இலக்கே, தமிழ்நாட்டின் இலக்கில் பாதியாக இருந்த நிலையில், அவை நிறைவேற்றியவை என்பன, பாதிக்கும் பாதியே.

அம்மாநாட்டின் போது, பா.ஜ.க.வின் நட்பு நிறுவனங்களான அதானி குழுமத்திற்கும், அம்பானி குழுத்திற்கும் மற்றும் பிற தொழில் முனைவோர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அப்போது, குஜராத்தின் வணிக நகரமான அகமதாபாத்தில் உள்ள உழைக்கும் மக்கள் இருப்பிடம், அம்மாநிலத்தின் மீதான மதிப்பை இழக்க செய்யும், ஆகையால் பெறவிருக்கும் முதலீடுகளும் குறையும் என்ற நோக்கில், அவ்விடத்தையே திரையிட்டு மூடியது அம்மாநில அரசு.

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பரிதவிக்கும் மக்கள் : அரங்கேறும் அநீதி!

அதற்கு உழைக்கும் மக்களிடம் கடும் எதிர்ப்பு எழுந்தது. “வறுமையை நீக்க முயற்சி எடுக்காமல், மறைத்து வருகின்றனர்” என்ற விமர்சனமும், பா.ஜ.க.வின் மீது விழுந்தது. ஆனால், அதற்கு சற்றும் செவி சாய்க்காத குஜராத் பா.ஜ.க அரசு, முதலாளிகளுக்கு சார்பான செயல்களை தொடர்ந்தது.

ஆகையால், மக்கள் தொகையும், பட்டதாரிகளும் அதிகரித்து வருகின்ற போதும், வேலைவாய்ப்பு மட்டும் குறைய தொடங்கியது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இருக்கின்ற வேலையும் இழக்க நேரிட்டது.

அதன் தொடர்ச்சியாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், குஜராத்தில் சுமார் 4 இலட்சம் பேர் TET, TAT ஆகிய ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும், பணி நியமனம் வழங்கப்படாத சூழல் உருவாகியுள்ளது.

தகுதிபெற்றவர்களுக்கே, இந்த நிலை என்றால் மற்றவர்கள் நிலை, மேலும் வருத்தத்திற்குரிய வகையிலேயே அமைந்துள்ளது.

இதனை மிஞ்சும் அளவில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பட்டதாரிகள் உள்ளனர். அம்மாநிலத்தில் துணை நிலை காவலர் பணிக்காக தேர்வெழுதியவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 45 இலட்சம், ஆனால் பணியிடங்களோ சுமார் 65 ஆயிரம் தான்.

ஆனால், “காவலர் பணி நிரப்புதலுக்காக நடத்தப்பட்ட தேர்வு செல்லாது. பலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்” என பல்வேறு காரணம் கூறி அந்த 65 ஆயிரம் பணிகளுக்கும் வேட்டு வைத்துள்ளார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இவை தவிர்த்து குஜராத்திலும் சரி, உத்தரப் பிரதேசத்திலும் சரி, அதிகாரத்தால் மக்கள் அச்சுறுத்தப்படுவதற்கு முடிவே இல்லை. மத நல்லிணக்கம் என்ற எண்ணமே வராத நிலையில், இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்குமான உரிமைகள் நசுக்கப்பட்டு, உடைமைகள் சூரையாடப்பட்டு வருகின்றன.

இது போன்ற சிக்கல்களை அடையாளம் கண்டு, அடைபட்டிருக்கும் மக்கள் தங்கள் கூண்டிலிருந்து வெளிவரும் காலம், நாடாளுமன்ற தேர்தல் என்ற வழியில் நெருங்கி கொண்டிருக்கிறது. இது அவர்கள் தோல்வியடைய போகும் தேர்தலாக மட்டும் இருக்காது பாசிச கொள்கையாளர்கள் எப்படி வரலாறு நெடுகிலும் மக்களால் வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை விவரிக்கும் தேர்தலாகவும் இது நிச்சயம் இருக்கும்.

banner

Related Stories

Related Stories