இந்தியா

வந்தே பாரத் ரயிலில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி : பயணி அதிர்ச்சி!

வந்தே பாரத ரயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வந்தே பாரத் ரயிலில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி : பயணி அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிப்.1 ஆம் தேதி ராணி கம்லாபதியில் இருந்து ஜபல்பூருக்கு வந்தே பாரத் விரைவு ரயில் ஒன்று சென்றது. இதில் சுபேந்த் கேரி என்பவர் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உணவைச் சாப்பிட்டபோது அதில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இது குறித்து அவர் மேற்கு மத்திய ரயில்வேயில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவருக்கு உரிய பதில் கொடுக்கவில்லை. இதனால் சுபேந்த் கேரி தனது எக்ஸ் சமூகவலைதளத்தில், வந்தே பாரத் ரயிலில் கொடுத்த உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த பரலும் IRCTCயை விமர்சிக்கத் தொடங்கினர். பின்னர் IRCTC மன்னிப்பு கேட்டது. IRCTC வெளியிட்ட பதிவில், "உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இதில் சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது.

அதேநேரம் உணவில் கரப்பான் பூச்சி இருப்பது இது முதல்முறை அல்ல. IRCTC இதுபோன்று மன்னிப்பு கேட்பதும் புதியது அல்ல. இதனால் ரயில் பயணிகள் பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து IRCTCயை விமர்சித்து வருகிறார்கள்.

banner

Related Stories

Related Stories