இந்தியா

”ஜனநாயகத்தை படுகொலை செய்ய அனுமதிக்க மாட்டோம்” : சண்டிகர் மேயர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

சண்டிகர் மேயர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

”ஜனநாயகத்தை படுகொலை செய்ய அனுமதிக்க மாட்டோம்” : சண்டிகர் மேயர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் கூட்டணி வைத்துப் போட்டியிட்டன. இந்த கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் என்பவர் போட்டியிட்டார். அதேபோல பாஜக சார்பில், மனோஜ் சோன்கர் என்பவர் போட்டியிட்டார்.

அதன்படி கடந்த ஜனவரி 30-ம் தேதி நடைபெற்ற இந்த தேர்தலில் 36 உறுப்பினர்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்ப்பாக்கப்பட்டது. ஆனால், மொத்தம் பதிவான 36 வாக்குகள் பதிவான நிலையில், அதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த 8 வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதனால் பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு 12 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே பா.ஜ.க வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், செல்லாதவை என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளைத் தேர்தல் ஆணையர் திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

”ஜனநாயகத்தை படுகொலை செய்ய அனுமதிக்க மாட்டோம்” : சண்டிகர் மேயர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

மேயர் தேர்தல் விவகாரம் குறித்தும், பாஜக வெற்றி செல்லாது என்று அறிவிக்குமாறும் ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் - ஹரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியது. இந்த சூழலில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மேல்முறையீடு செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் மற்றும் ஜனநாயகப் படுகொலை என்றும் வாக்குச்சீட்டுகளில் திருத்தம் செய்த தேர்தல் அதிகாரியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும் வரை சண்டிகர் மாநகராட்சி கூட்டத்தை நடத்த உச்சநீதிமன்ற தடைவிதித்துள்ளது.

banner

Related Stories

Related Stories