இந்தியா

கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்கர்கள்... அபராதம் விதித்த பாஜக ஆளும் மாநில போலீஸ் !

கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதால், அமெரிக்கர்கள் 2 பேருக்கு ரூ.41,500 அபராதம் விதித்துள்ள அசாம் போலிசுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்கர்கள்... அபராதம் விதித்த பாஜக ஆளும் மாநில போலீஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். அவர்கள் இந்தியாவில் இருக்கும் சிற்பக்கலைகள், கலாச்சாரங்கள், ஆடை அலங்காரங்கள் உள்ளிட்டவையை அறிந்துகொள்கின்றனர். இதனை சிலர் புகைப்படம் பிடித்தோ அல்லது வீடியோ எடுத்தோ தங்களது வலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.

இப்படி நாள்தோறும் இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அவ்வப்போது ஏதாவது ஒரு சோக நிகழ்வு நடக்கிறது. குறிப்பாக பாஜக ஆளும் அல்லது பாஜக கூட்டணி உள்ள மாநிலங்களில், சுற்றுலா வரும் பெண்களுக்கு பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட நிகழ்வுகள் ஏற்படுகின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் இந்திய பெண்களுக்குதான் பாதுகாப்பு இல்லையென்றால், வெளிநாட்டு பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று பலரும் கண்டனங்களும் தெரிவித்து வருகின்றன.

கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்கர்கள்... அபராதம் விதித்த பாஜக ஆளும் மாநில போலீஸ் !

இந்த நிலையில் தற்போது சுற்றுலா வந்த இரண்டு பயணிகள், கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டதால் அபராதம் செலுத்தியுள்ளனர். இந்த நிகழ்வுக்கு தற்போது பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஜான் மேத்திவ் (64), மைக்கேல் ஜேம்ஸ் (77). இவர்கள் அண்மையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது இவர்கள் கடந்த பிப் 1-ம் தேதி பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் உள்ள சோனிட்பூர் என்ற பகுதியை கண்டுகளிக்க சென்றுள்ளனர். அங்கே கிறிஸ்துவர்கள் சபைக்கூட்டம் நடைபெற்றது. எனவே இவர்கள் கலந்து கொண்டனர். இதனை பார்த்த அம்மாநில போலீசார் உடனே அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். அதுவும் ரூ.500 அல்ல, ரூ.1000 அல்ல.. 500 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.41,500) அபராதம் விதித்துள்ளனர்.

கிறிஸ்தவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்கர்கள்... அபராதம் விதித்த பாஜக ஆளும் மாநில போலீஸ் !

அவர்கள் தங்கள் தர்ப்பை எடுத்து கூற முயன்றும், அம்மாநில போலீசார் தலா ரூ.41,500 அபராதத்தை வசூலித்த பிறகே அவர்களை அங்கிருந்து விடுவித்தனர். இந்த நிகழ்வு குறித்து அம்மாநில போலீசார் கூறுகையில், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் மதங்கள் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க கூடாது என்று விதி உள்ளதாகவும், அவர்கள் அதையும் மீறி கலந்து கொண்டதாகவும், அதனால் அபராதம் விதித்ததாகவும் தெரிவித்தனர்.

பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பல்வேறு சுற்றுலா பயணிகள் தினமும் வருகை தருவதோடு, பூஜை நடைபெறும் நேரத்தில் அங்கே இருந்து நிகழ்வுகளை கண்டு களிக்கின்றனர். அவர்களுக்கு அபராதம் விதிக்காமல், கிறிஸ்துவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதற்காக மட்டும் அபராதம் விதிக்கப்படுமா? என்று பலரும் கேள்விகளால் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories