இந்தியா

”இளைஞர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : ராகுல் காந்தி MP ஆவேசம்!

ரயில்வே துறையில் 5000 பேருக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ராகுல் காந்தி எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”இளைஞர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : ராகுல் காந்தி MP ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. குறிப்பாக ரயில்வே போன்ற அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் உள்ளது.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசு காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வேண்டும் என்ற இளைஞர்களை வீதியில் திண்டாட வைத்து வருகிறது. வேலை கிடைக்காமல் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு இந்த ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சி செய்து வருகிறது.

இந்நிலையில் ரயில்வே துறையில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் வெறும் 5 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பை ஒன்றிய மோடி அரசு அறிவித்துள்ளது. இதற்கு இளைஞர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

”இளைஞர்களுக்கு மீண்டும் அநீதி இழைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு” : ராகுல் காந்தி MP ஆவேசம்!

இந்நிலையில் இளைஞர்களுக்கு மீண்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு அநீதி இழைத்துள்ளது என ராகுல் காந்தி MP கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், நாட்டில் மூன்றில் ஒரு இளைஞர் வேலையில்லா திண்டாட்டத்தில் பலியாகும் போது அவர்களுக்கு மீண்டும் பிரதமர் துரோகம் இழைத்துள்ளார்.

சாதாரண குடும்பத்திலிருந்து வந்து, 18-18 மணி நேரம் கடினமாக உழைத்து, சிறிய வாடகை அறைகளில் வாழ்ந்து, பெரிய கனவு காணும் இளைஞர்களிடம்தான் இந்த முறை மோசடி நடந்துள்ளது. ரயில்வேயில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 5 ஆண்டுகள் காத்திருந்து 5696 பணியிடங்களை மட்டும் தேர்வு செய்வது போட்டி மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

ரயில்வேயில் ஆட்சேர்ப்பை குறைக்கும் கொள்கை யாருடைய நலனுக்காக உருவாக்கப்பட்டது?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதி எங்கே? ரயில்வேயை தனியார் மயமாக்க மாட்டோம் என்ற உறுதி எங்கே?.

ஒன்று மிகத் தெளிவாக உள்ளது – மோடியின் உத்தரவாதம் இளைஞர்களுக்கு எச்சரிக்கை மணி. அவர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களுக்கான நீதிக்காகவும் குரல் எழுப்ப வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories