இந்தியா

”ராகுல் காந்தியின் யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது” : மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்!

அசாமில் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் நடந்த தாக்குதலுக்குக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

”ராகுல் காந்தியின் யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது” :  மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தைக் கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தைக் கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்தது. இந்த யாத்திரையின் போது லட்சக்கணக்கான பொதுமக்களை ராகுல் காந்தி சந்தித்தார். இந்த யாத்திரை காங்கிரஸ்க்கு மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் ஜனவரி 14 ஆம் தேதி மணிப்பூரில் பாரத் ஜோடோ நீதி யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். இந்த யாத்திரை நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 நாட்களில் 110 மாவட்டங்களில் சுமார் 6700 கி. மீ பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த நடைப்பயணம் நடைபெறவுள்ளது. மணிப்பூர், நாகாலாந்தில் யாத்திரை முடிந்ததை அடுத்துக் கடந்த ஜன.18ம் தேதி ராகுல் காந்தியின் யாத்திரை அசாமிற்கு வந்தது. இம்மாநிலத்தில் 8 நாட்கள் யாத்திரை மேற்கொள்கிறார் ராகுல் காந்தி.

இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பா.ஜ.கவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் என்று கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "இந்திய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள ஒவ்வொரு உரிமையையும், நீதியையும் காலில் போட்டு பாஜக மிதிக்கிறது. அசாமில் பாஜக அரசு கையாண்ட இந்த தாக்குதல் மற்றும் மிரட்டல் தந்திரத்தால் காங்கிரஸ் கட்சி பயந்துவிடாது. இந்த பாஜக கைக்கூலிகள் மீது காங்கிரஸ் கட்சி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ராகுல் காந்தியின் யாத்திரையை யாராலும் தடுக்க முடியாது" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories