இந்தியா

தென் இந்தியாவில் தொடர் ஏமாற்றத்தை சந்திக்கும் மோடி : மதவாத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு!

காசி - தமிழ் சங்கம், மோடியுடன் பேரணி, மதவாத நிகழ்வுகள் போன்ற ஏமாற்று அரசியலை வைத்து தென் மாநிலங்களையும் கைப்பற்றி விடலாம் என கனவு காணும் பாஜக

தென் இந்தியாவில் தொடர் ஏமாற்றத்தை சந்திக்கும் மோடி : மதவாத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பாஜவின் மதவாத அரசியல் மூலம் வட மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில், ஓர் அசைக்க முடியாத கட்சியாக உருமாறியுள்ளது. எனினும், தென் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அடிநிலை கட்சியாகவே உள்ளது.

இந்நிலையில், தென் இந்தியாவையும் கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது பாஜக. காசி- தமிழ் சங்கம், கேரளத்தில் நடந்த மோடியுடனான பெண்களின் பேரணி போன்ற அதன் முன்னெடுப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், பல புதிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கேரளத்தில் பேரணி மேற்கொண்டு ஒரு கிழமையே ஆன நிலையில், அடுத்த பேரணிக்கும் நேரம் குறித்துள்ளது ஒன்றிய அரசு.

கடந்த 10 ஆண்டுகளில், தேர்தலின் நெருக்கத்தில் மட்டுமே வருகைத் தரும் பாஜக தேசிய தலைவர்கள், மாநிலங்களின் நிதி நெருக்கடிக்கு உறுதுணையாக இருந்தார்களா? என்றால், அண்மையில் தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களின் பேரிடருக்கான நிதி வழங்கீட்டின் வழியே, இல்லை என்று விடையளித்துள்ளது அதிகாரத்துவ பாஜக. கேரளத்தில் மருத்துவத் துறையில் கடும் நெருக்கடிக்கிடையில் ஒன்றியம் நிதி ஒதுக்கிடாமல் தாமதித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

தென் இந்தியாவில் தொடர் ஏமாற்றத்தை சந்திக்கும் மோடி : மதவாத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழ்நாடு!

மேலும், அண்ணாமலை போன்ற மாநிலத் தலைவர்களும், பெரும் அரசியல் புரிதலற்ற நிலையில், குறிப்பாக தமிழக மக்களின் தேவைகள், அடிப்படைகளுக்கு முற்றும் புறம்பான இந்துத்துவ அரசியலை, தமிழ்நாட்டில் நடத்திவருகின்றனர். இதன் தாக்கம், மக்களிடையே குழப்பத்தை ஏற்பத்தியுள்ளது.

இவ்வாறு குழப்பத்தை உண்டாக்கி, அதனில் குளிர்காய நினைக்கும் பாஜகவிற்கு, கடந்த 40 ஆண்டுகளில் பெற்ற அதிபெரும் தோல்வியை, மாற்றமில்லாமல் இம்முறையும் திருப்பி அளிக்கப்படும் என்பதில் எவ்வித குழப்பமும் இல்லை என்ற உறுதியை தென் இந்திய மக்கள், அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளின் வழி தெரிவித்துள்ளனர்.

எனினும், பாஜகவின் குளருபடி நடவடிக்கைகளாலும், மதவாத மற்றும் இந்துத்துவ அரசியலைக் கொண்டும் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றி கண்டுள்ள நிலையில், தற்போது அம்மாநில மக்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு, அதானியின் காடுகளை அழிக்கும் திட்டம் மூலம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.

இந்த நிலையை, தென் மாநிலங்களிலும் புகுத்த நினைக்கும் அரசியல் சூழ்ச்சிகளைக் சரிவரக் கண்டறியும் தெளிவு, தென் மாநில மக்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு மக்களுக்கு உண்டு என்ற உணர்வெழுச்சிகளை வெளிப்படுத்தும் வேளையில், அண்டை மாநிலங்களையும் காப்பற்றும் கடமை தமிழகத்திற்கு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories