இந்தியா

சமூக ஆர்வலர் உமர் காலித் வழக்கை விசாரிக்க மறுக்கும் உச்ச நீதிமன்றம் ? பின்னணி என்ன? : சிறப்புக் கட்டுரை!

உமர் காலித் வழக்கு பட்டியலிடப்பட்டத்தில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஜனநாயக அமைப்பினர் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்

சமூக ஆர்வலர் உமர் காலித் வழக்கை விசாரிக்க மறுக்கும் உச்ச நீதிமன்றம் ? பின்னணி என்ன? : சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், நாட்டில் தலித், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு எதிராக நிகழும் அவலங்களை எதிர்த்து சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒன்றிய அரசுக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது மோடி அரசு. அந்தவகையில் பழங்குடியின மக்களின் உரிமைக்காக உழைத்த ஸ்டேன் சாமியை சிறையில் அடைத்து உயிரை பறித்தது ஒன்றிய பாஜக அரசு.

அதேபோல், பீமா கோரேகான் வழக்கு தொடர்பாகவும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். கூட்டுச்சதி குறித்தும் அம்பலப்படுத்திய சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே, குஜராத் மாநிலத்தில் இந்துத்வா கும்பல்களால் இஸ்லாமிய மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த வழக்கை நடத்தி வந்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாத் மற்றும் பா.ஜ.க அரசால் ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட 78 வயதான அரசியல் ஆர்வலரும், கவிஞரும், எழுத்தாளருமான வரவர ராவ் என ஆகியோர் மோடி அரசால் பழிவாங்கப்பட்டு சிறையில் உள்ளார்கள்.

சமூக ஆர்வலர் உமர் காலித் வழக்கை விசாரிக்க மறுக்கும் உச்ச நீதிமன்றம் ? பின்னணி என்ன? : சிறப்புக் கட்டுரை!

இவர்களின் வழக்குகளும் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையிலேயே உள்ளது. அந்தவகையில் மோடி அரசின் மோசமான சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடிய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் சமூக ஆர்வலருமான உமர் காலித் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் ஆகின்றது. இந்த வழக்கு கடந்த ஓராண்டில் ஒருமுறை கூட விசாரணைக்கு வரவில்லை.

உமர் காலித்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் உமர் காலி. இவர் ஒன்றிய பாஜக அரசின் இந்துத்வா கொள்கைகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வந்தவர். மோடி அரசால் அறிவிக்கப்பட்ட சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடியவர். கடந்த 2019ம் ஆண்டில் நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்தது.

டெல்லியில் நடைபெற்ற பல போராட்டங்களுக்கு உமர் காலித் தலைமை தாங்கினார். சுமார் மூன்று மாதங்களாக போராட்டம் நீடித்த நிலையில், பிப்ரவரில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலால் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தில் 53 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

சமூக ஆர்வலர் உமர் காலித் வழக்கை விசாரிக்க மறுக்கும் உச்ச நீதிமன்றம் ? பின்னணி என்ன? : சிறப்புக் கட்டுரை!

இந்த கலவரத்தில் உமர் காலித் மற்றும் மற்றவர்கள் சதி செய்ததாக கூறி கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி அன்று அவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் கலவரம், வெடிகுண்டி வீச்சு, இரு சமூகத்தினரிடையே மோதலை உண்டாக்கும் வகையில் வெறுப்பு பேச்சு, போலிஸாரை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.

மேலும் உமர் காலித் செய்த சதியே டெல்லி வன்முறைக்கு காரணம் என அம்மாநில காவல்துறை குற்றம் சாட்டியது. மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உமர் காலித்தை சந்தித்ததாகவும் போலிஸார் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் முறையான எந்தவொரு சான்றுகளும் சமர்பிக்கவில்லை.

இதனையடுத்து உமர் காலித் கலவரத்தில் பங்கெடுத்தது, வன்முறையில் ஈடுபட்டது என எந்த ஆதாரமும் அவருக்கு எதிராக இல்லை என்பதால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மோடி அரசுக்கு எதிரான எதிர்ப்பு குரலை நசுக்கவே இத்தகைய பொய்யான வழக்கை பதிந்ததாக உமர் காலித் சார்பில் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் முழுமையடையாத விவாகரம் இன்னும் உள்ளதால் உமர் காலித்தை சிறையில் அடைப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறி ஜாமின் வழங்கினார்.

ஆனால் இரண்டாவது வழக்கில் இன்னும் சிறையில் இருக்கிறார் உமர் காலித். இந்த வழக்கில் உமர் காலித் மீது தீவிரவாதம், சதி, சட்டவிரோத நடவடிக்கை என எப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டியது டெல்லி காவல்துறை. இதனால் டெல்லி கர்கார்டூமா நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் இரண்டாவது வழக்கில் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் அதில் பல ஆதாரப்பூர்வ தகவலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டுள்ளது.

சமூக ஆர்வலர் உமர் காலித் வழக்கை விசாரிக்க மறுக்கும் உச்ச நீதிமன்றம் ? பின்னணி என்ன? : சிறப்புக் கட்டுரை!
Mahadeo Sen

இதனையடுத்து உமர் காலித் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறுகையில், “உமர் காலித்துக்கு எதிரான ஆதாரங்கள் தெளிவாக இல்லை எனபல சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றார்கள். எனவே அவருக்கு ஜாமீன் வழங்குவதே நியாயமானது. வாட்ஸ் ஆப் குழுவில் இருப்பதும், போக்குவரத்தை முடக்குவதும் ஒரு சாதாரண போராட்ட வடிவமாகும். இதனை அரசியல் கட்சிகளும் செய்கின்றனர்.

மேலும் உமர் காலித் வன்முறையை தூண்டும் வகையில் பேசவில்லை. சில சாட்சியங்களின் வாக்குமூலம் முரண்பாடாக உள்ளது. அதேநேரத்தில் டெல்லி சிஏஏ போராட்ட வன்முறை வெடிப்பதற்கு முன்னதாக மோதல் போக்கை உண்டாக்கும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு பட்டியலிடப்பட்டத்தில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஜனநாயக அமைப்பினர் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

2023ஆம் ஆண்டு மே மாதம் உமர் காலித் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிட்டப்பட்டது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையில் இருந்து விலகினார். இரு தரப்பு வழக்கறிஞர்கள் முறையாக ஆஜராகவில்லை. சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானவை என மனுக்கள் பட்டியலிடப்பட்டது. ஆனாலும் வழக்கு விசாரணைக்கு வரவில்லை.

சமூக ஆர்வலர் உமர் காலித் வழக்கை விசாரிக்க மறுக்கும் உச்ச நீதிமன்றம் ? பின்னணி என்ன? : சிறப்புக் கட்டுரை!

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கை பட்டியலிட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு பிரசாந்த் பூஷன் கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடந்த டிசம்பர் 6ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “பட்டியல் விதிகளை மீறி சில வழக்குகள் சில அமர்வுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உமர் காலித்தின் ஜாமீன் வழக்கு இப்போது நீதிபதி திரிவேதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு உள்ளது. இந்த வழக்கை முன்னதாக, நீதிபதியாக நீதிபதி பேலா திரிவேதி விசாரிக்க மூத்த நீதிபதிகள் அமர்வை வழிநடத்தினர். ஆனால் இப்போது நீதிபதி பேலா திரிவேதி தலைமையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் உமர் வழக்கு விவகாரம் குறித்து கட்டுரை தீட்டியுள்ள ஆர்ட்டிகிஸ் 14 என்ற இணையதளம், வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ள முறை உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக உள்ளது. மூத்த நீதிபதிகளே உமர் காலித் வழக்கை விசாரித்திருக்க வேண்டும். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் அந்த நீதிபதி தலைமையில் மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, பதில் அளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தால் செயல்படுத்தப்படும் பட்டியல் முறையில் முறையாக பட்டியலிடப்படுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories