இந்தியா

3 குற்றவியல் சட்டங்கள் : வலுக்கும் எதிர்ப்பு... பாஜக ஆளும் மாநிலங்களிலும் வெடிக்கும் போராட்டம் !

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

3 குற்றவியல் சட்டங்கள் : வலுக்கும் எதிர்ப்பு... பாஜக ஆளும் மாநிலங்களிலும் வெடிக்கும் போராட்டம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து மசோதாக்கள் மீதான விவாதம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நடைபெற இருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மர்ம நபர்கள் குதித்து ரகளையில் ஈடுபட்டனர்.

3 குற்றவியல் சட்டங்கள் : வலுக்கும் எதிர்ப்பு... பாஜக ஆளும் மாநிலங்களிலும் வெடிக்கும் போராட்டம் !

மேலும் புகை குண்டுகளை வீசி தாக்குதலில் ஈடுபட்ட அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து விதிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு வலியுத்திய 146 எதிர்க்கட்சி எம்.பிக்கள் அனைவரையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர்.

இவ்வாறு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு எதிர்க்கட்சி எம்.பிக்கள் இல்லாத நேரத்தில் எதிர்ப்புகள் எதுவுமின்றி 3 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா ஆகிய 3 கிரிமினல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து இந்த சட்டங்களை நிறவேற்றுவதற்காக வேண்டுமென்றே இந்த சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், உடனே இந்த சட்டங்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.

3 குற்றவியல் சட்டங்கள் : வலுக்கும் எதிர்ப்பு... பாஜக ஆளும் மாநிலங்களிலும் வெடிக்கும் போராட்டம் !

இதைத்தொடர்ந்து இந்த மசோதாக்கள் சட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில், இந்த சட்டங்களுக்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏனெனில் ஒன்றிய பாஜக அரசு தற்போது கொண்டு வந்திருக்கும் பாரதிய நியாய சன்ஹிதா குற்றவியல் சட்டத்தின் 106 (2) பிரிவு, Hit and Run சம்பவங்களில் நேரும் மரணங்கள் விபத்தாக அல்லாமல் கொலையாக நிர்ணயிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த குற்றச்சாட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.7 லட்சம் வரை அபாரதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் மக்களுக்கு விரோதமாக பல்வேறு விதிகள் இந்த சட்டங்களில் இடம்பெற்றுள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் லாரி உள்ளிட்ட போக்குவரத்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பாஜக மற்றும் பாஜக கூட்டணி ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

3 குற்றவியல் சட்டங்கள் : வலுக்கும் எதிர்ப்பு... பாஜக ஆளும் மாநிலங்களிலும் வெடிக்கும் போராட்டம் !

இந்த போராட்டம் காரணமாக நேற்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பினருடன் ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் பல்லா பேச்சுவார்த்தை நடத்தினார். சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியிலே முடிந்துள்ளதாகவும், அரசாங்கம் பலமுறை வெற்று வாக்குறுதிகளை அளித்தது போல், இப்போதும் அதையேதான் செய்வதாகவும், எந்த உறுதியையும் ஒன்றிய அரசு தரவில்லை என்றும், அகில இந்திய மோட்டார் போக்குவரத்து கூட்டமைப்பின் தலைவர் அத்வால் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கிருக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. சாலை மறியலில் ஈடுபடுவதால் பல்வேறு பகுதிகளில் டிராபிக் உருவாகியுள்ளது. மேலும் காய்கறி தட்டுப்பாடு என பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களின் வலியுறுத்தல்களை ஒன்றிய அரசு செவி சாய்க்காமல் இருந்து வருவதற்கு எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பழைய குற்றவியல் சட்டம், அஜாக்கிரதையாலும் எதிர்பாராமலும் நேர்ந்த விபத்தாக Hit and run மரணங்களை கருதி இரு வருடங்கள் வரை மட்டும் சிறைத்தண்டனை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories