இந்தியா

பட்டியல் சமூக பெண் பாலியல் வன்கொடுமை ? போலீஸ் கான்ஸ்டபிள் கைது.. உ.பி-யில் அதிர்ச்சி !

பட்டியல் சமூக பெண்ணை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பட்டியல் சமூக பெண் பாலியல் வன்கொடுமை ? போலீஸ் கான்ஸ்டபிள் கைது.. உ.பி-யில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேந்த 25 வயது பட்டியல் சமூக பெண் ஒருவர் குருகிராமில் உள்ள சிறுநீரக மையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த பெண் ஜான்சியில் நர்சிங் பயிற்சி மேற்கொண்டபோது அங்கு போலீஸ் கான்ஸ்டபிள் ராகவேந்திர சிங் (வயது 27) என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

போலீஸ் கான்ஸ்டபிள் ராகவேந்திர சிங் உத்தரப்பிரதேச மாநிலத்த்தி ஆக்ரா பகுதியில் உள்ள பெலங்கஞ்சில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார். ராகவேந்திர சிங்கும் அந்த பட்டியல் சமூக பெண்ணும் அடிக்கடி சந்தித்து வைத்துள்ளனர்.

இதனிடையே கடந்த டிசம்பர் 29-ம் தேதி கான்ஸ்டபிள் தங்கியிருந்த வீட்டில் அந்த பட்டியல் சமூக பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார், இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பட்டியல் சமூக பெண் பாலியல் வன்கொடுமை ? போலீஸ் கான்ஸ்டபிள் கைது.. உ.பி-யில் அதிர்ச்சி !

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பெண்ணின் வீட்டார் போலீஸ் கான்ஸ்டபிள் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். மேலும் போலீஸ் கான்ஸ்டபிள் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

அதன் பின்னர், அந்த கான்ஸ்டபிள் மேல் வழக்கு பதிவு செய்த போலிஸார் அவரை கைது செய்தனர். ஏனினும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே அந்த பெண்ணின் மரணத்துக்கு காரணம் என்ன என்பது தெரியும் என போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories